- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயை வெறுப்பேற்ற இப்படி பண்றாங்களா? இல்லே அரசுக்கு ஆதரவா இதை செய்றாங்களா? - உதயநிதிக்கு...

நடிகர் விஜயை வெறுப்பேற்ற இப்படி பண்றாங்களா? இல்லே அரசுக்கு ஆதரவா இதை செய்றாங்களா? – உதயநிதிக்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்து!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திடீரென அவர் அரசியலுக்கு வந்தது, தமிழக மக்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. வருகிற அக்டோபர் 27ம் தேதி தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விஜய் நடத்த இருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தனது கட்சி பிரவேசத்தை அறிவித்த நடிகர் விஜய், முதல் அறிக்கையிலேயே தனது இலக்கு 2026 சட்டசபை தேர்தல்தான் என்றும், முதல்வர் நாற்காலியில் அமர்வதுதான் தனது லட்சியம் என்றும் அப்பட்டமாக கூறிவிட்டார். அன்று முதல் ஆளுங்கட்சியான திமுகவின் முக்கிய அரசியல் எதிரியாக விஜய் மாறிவிட்டார்.

- Advertisement -

தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதுமை காரணமாக முன்பு போல் சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. சமீபமாக அவர் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளில் அது வெளிப்படையாக தெரிகிறது. நடக்கவும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கவும் அவர் சிரமப்படும் நிலையில், கட்சி பணிகளை, ஆட்சி விவகாரங்களை கவனித்துக்கொள்ள நேற்று விளையாட்டுத்துறை அமைச்சரான தனது மகன் உதயநிதியை, துணை முதல்வராக ஸ்டாலின் அறிவித்து விட்டார்.

இதே போன்ற ஒரு நிலை, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஏற்பட்ட போது, துணை முதல்வராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இப்போது அதே பாணியில் தனது மகன் உதயநிதியை ஸ்டாலின் துணை முதல்வராக நியமித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே திமுகவின் விசுவாசியாக மாறிவிட்ட நிலையில், உதயநிதிக்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் உதயநிதிக்கு போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். பலர், வலைதள பக்கங்களில் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். நடிகர்கள் சிலம்பரசன், தனுஷ், விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன், அருள்நிதி, எஸ்ஜே சூர்யா, இயக்குனர்கள் வெங்கட்பிரபு, மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்த போதும், அவர் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய போதும், கட்சி பாடலை வெளியிட்ட போதும் அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சார்ந்துள்ள தமிழ் சினிமா துறையினர் தரப்பில் இருந்து இப்படி வாழ்த்துகள் குவியவில்லை. லோகேஷ் கனகராஜ், அட்லி போன்றவர்களே வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது திமுகவுக்கு எதிராக அரசியல் களத்தில் குதித்திருக்கும் விஜயை வெறுப்பேற்ற, இப்படி துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்துகளை சொல்கிறார்களா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்