சந்தானம் நடிப்பில் “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தபோதே ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தோடு திரையரங்குகளில் இருந்து வெளிவருகின்றனர். ஒரு அதிரி புதிரியான காமெடி திரைப்படமாக “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் அமைந்துள்ளதாக பல பாஸிட்டிவான ரிவ்யூக்களே வருகின்றன.

ஆனால் ஒரு திரைப்படத்திற்கு என்னதான் பாஸிட்டிவ் ரிவ்யூ வந்தாலும் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், பெரும்பாலும் நெகட்டிவாக விளாசிவிடுவார். அவர் பாராட்டிய திரைப்படங்கள் வெகு குறைவே. ஆதலால் அவர் ஒரு திரைப்படத்தை திட்டுவதை பார்ப்பதற்காகவே அவரது யூட்யூப் சேன்னலுக்கு ரசிகர்கள் படையெடுப்பார்கள்.
ஆனால் தற்போது ஒரு அதிசயம் நடந்துள்ளது. அதாவது “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பாஸிட்டிவாக ரிவ்யூ தந்துள்ளார். அதாவது “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் அதிசயமாக நல்ல கதையம்சம் இருப்பதாக கூறியுள்ளார். “இந்த படத்தில் எந்த ஒரு காட்சியும் தேவையில்லாத காட்சி என்றே சொல்ல முடியாது. தேவையில்லாத பாடல்களோ காதல் காட்சிகளோ வைத்து உயிரை எடுக்காமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருக்கிறார்கள்.

படம் முழுவதுமே பல காமெடி காட்சிகள் இருந்தது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் குபீர் சிரிப்பு வருவது போல் பல காமெடி காட்சிகள் இருந்தது. பொதுவாக பேய் படம் என்றால் கம்மி பட்ஜெட் என்பதற்காக ஒரே இடத்தில் எடுத்து படமாக்கி ஒப்பேத்தி விடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அது போல் ஒப்பேத்தாமல் படத்திற்கு என்ன தேவை இருக்கிறதோ அதை சரியாக செய்திருந்தார்கள்” என்று பாராட்டி இருக்கிறார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பாஸிட்டிவ் ரிவ்யூவை பார்த்த ரசிகர்கள், “நம்ம ப்ளூ சட்டை மாறனா இப்படி பேசுறது, நம்பவே முடியலையே” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.





