- Advertisement -
Homeபொழுதுபோக்குமிகப்பெரிய வசூலை குவித்து உண்மையாகவே ப்ளாக் பஸ்டர் அந்தஸ்தை பெற்ற 9 படங்கள்... பிரபலம் வெளியிட்ட...

மிகப்பெரிய வசூலை குவித்து உண்மையாகவே ப்ளாக் பஸ்டர் அந்தஸ்தை பெற்ற 9 படங்கள்… பிரபலம் வெளியிட்ட தகவல்

- Advertisement -

உலகத்தை சில வருடங்களுக்கு முன்பு சிறை பிடித்து வைத்திருந்தது கொரோனா வைரஸ். அதன் காரணமாக திரையரங்குகளும் மூடப்பட்டன அந்த சமயத்தில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் பெருக ஆரம்பித்தது. தமிழைப் பொறுத்தவரை சூர்யாதான் முதன்முறையாக ஓடிடிக்கு தன்னுடைய சூரரைப் போற்று படத்தை நேரடியாக கொடுத்தார். படம் மெகா ஹிட் ஆனது. அதேபோல் ஜெய் பீம் படமும் ஓடிடியில்தான் வெளியானது

ஆனால் ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்வதிலேயே தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் 50 சதவீதம் பேருக்குதான் அனுமதி என தமிழ்நாடு அரசு அறிவித்தாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படம் திரையரங்குகளில்தான் ரிலீஸ் ஆனது. அதை போல் வலிமை, சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட படங்களும் திரையரங்குகளில்தான் வெளியாகின.

இந்தச் சூழலில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுவரை மெகா ஹிட் ஆன வசூலில் அதிகம் சாதனை படைத்த ஐந்து படங்களின் சாரி 9 படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறார் அதன்படி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “Real Blockbusters vs Paid Blockbuster:

கொரோனா காலகட்டத்தில் இருந்து தற்போதுவரை, தியேட்டர்களில் பல வாரங்கள் ஓடி.. உண்மையாகவே மிகப்பெரிய வசூலை குவித்த ப்ளாக் பஸ்டர் படங்கள் இவை மட்டுமே: மாஸ்டர், டாக்டர், மாநாடு, கர்ணன், விக்ரம், திருச்சிற்றம்பலம், லவ் டுடே, பொன்னியின் செல்வன் 1, போர்த்தொழில்.

இதுபோக மேலும் சில படங்கள் ஹிட் ஆகின. வலிமைக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. வாரிசும், துணிவும் ப்ளாக் பஸ்டர் இல்லை. ஆனால் போதுமான வசூலை ஈட்டியதாக சொல்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒன்பது படங்களின் தயாரிப்பாளர்கள் படத்திற்கு தேவையான ப்ரமோஷனை செய்தார்கள். அவ்வளவுதான். ஆனால் தற்போது நடைபெற்றுவரும் கூத்தினை போல… ஊரில் உள்ள உப்மா Box office trackers and retired journalists களுக்கு வெயிட்டாக பிஸ்கட் தந்து ட்விட்டர் மற்றும் யூ ட்யூபில் இந்த 9 படங்களின் தயாரிப்பாளர்களும் கூவ சொல்லவில்லை. அளவுக்கு மீறிய போலி வசூல் நிலவரத்தை பரப்பி மக்களை ஏமாற்றவில்லை.

அதேபோல இப்படங்களில் நடித்த ஹீரோக்கள்…. என் பட்டத்தை பறிக்கறாங்க, காளையோட கொம்பை சீவிட்ட என்று பாடல்களில் உளரவில்லை. ‘பருந்து, காக்கா, நாய்’ என்று இசைவெளியீட்டிற்கு சம்மந்தமே இல்லாமல் பதட்டத்தில் பேசவில்லை. ஏற்கனவே இரண்டு படுதோல்விகள். இதுவும் ஊத்திக்கொண்டால் கதை கந்தல் ஆகிவிடும் எனும் பயத்தில்… சில கோடிகளை அள்ளித்தந்து பெரும்பாலான சொம்புகளுக்கு செட்டில் செய்து இருக்கிறாராம் கபாலி.

அதனால்தான் இந்த வடை மிஷின்களின் சத்தம் நம் காதுகளை கிழிக்கிறது, படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக வசூலை ஏற்றி சொல்லி இருந்தாலாவது.. மக்கள் பலர் வழக்கம்போல இவர்களின் வடைக்கதைகளை கேட்டு ஏமாந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இரண்டாம் நாளே உணர்ச்சிவசப்பட்டு 200 கோடி, இப்போது 400 கோடி, அடுத்து 800 கோடி என்று காமடி செய்து கூண்டோடு சிக்கிக்கொண்டார்கள்.

உங்கள் சாயத்தை வெளுக்க தனியே ஆள் வரவேண்டாம். நீங்களே வெளுத்துக்கொண்டு வருகிறீர்கள். நாளை இரவு இந்த வடை ஓனர்கள்.. மிஷினை 400 கோடியில் நிறுத்துவார்களா அல்லது 600 கோடியில் நிறுத்துவார்களா? இறுதியாக 2,000 கோடி வரை செல்லவும் பிரகாசமான அறிகுறிகள் தெரிகின்றன. பண்ணையாரின் பங்களா வாசல் பிஸ்கட் நன்றாக வேலை செய்கிறது. நடக்கட்டும். நடக்கட்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.

சற்று முன்