- Advertisement -
Homeபொழுதுபோக்கு‘நீக்’ பட ஷூட்டிங்கில் மிக பிஸியாக இருக்கும் நடிகர் தனுஷ் - புதிய டைட்டில் குழப்பத்தில்...

‘நீக்’ பட ஷூட்டிங்கில் மிக பிஸியாக இருக்கும் நடிகர் தனுஷ் – புதிய டைட்டில் குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள் – என்ன நடக்குது இங்கே?

- Advertisement -

நடிகர் தனுஷ் இப்போது தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷூக்கு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் கோவா பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடிக்கிறார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பிச்சைக்காரன் கேரக்டரில், அந்த கெட்டப்பில் தாடியுடன் தனுஷ் நடித்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருமகன், பிரபல டைரக்டர் கஸ்தூரி ராஜா மகன், செல்வராகவன் தம்பி இப்படி பல பெருமைகளை கொண்ட அவரை இப்படிப்பட்ட கேரக்டரில், கெட்டப்பில் ஏன் நடிக்க வைத்தனர் என பயங்கர அதிருப்தியில் இருக்கின்றனர். வசதியற்ற ஒருவராக காட்ட வேறு எத்தனையோ விதங்களில் காட்டியிருக்கலாமே என புலம்புகின்றனர்.

- Advertisement -

இந்த குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ், தனது 50வது படமான ராயன் என்ற படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் வருகிறார். தனது இந்த படத்தை மிகப்பெரிய அளவில் மேக்கிங் செய்து கொண்டு வர தனுஷ் மிக தீவிரமாக இருக்கிறார். அதற்காக நட்சத்திர கூட்டத்தை இந்த படத்தில் இறக்கியிருக்கிறார். பல பிரபல நட்சத்திரங்கள், ராயன் படக்களத்தில் நிற்கின்றனர்.

குறிப்பாக பிரகாஷ் ராஜ், காளிதாஸ், செல்வராகவன், சரவணன் என பல முக்கிய நட்சத்திர நடிகர்களை தனது ராயன் படத்தில் நடிக்க வைத்துள்ள தனுஷ், இந்த படத்தை வெற்றிமாறன் படம் ரேஞ்சுக்கு பெரிய அளவில் தர திட்டமிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிக்கிற அனைவருக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதுமட்டுமின்றி இப்போது நடிகர் தனுஷின் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் தனுஷின் அக்கா மகன்தான் ஹீரோ. அனிகா சுரேந்திரன்தான் இந்த படத்தில் நாயகி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. அதையும் துரிதமாக முடித்து விட ஆயத்தமாகி விட்டார் தனுஷ்.

இதற்கிடையே தற்போது நீக் படம், தனுஷ் டைரக்‌ஷன் செய்த படம் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. அது அவர் அடுத்து புதிதாக இயக்கும் படமா என்று கேட்டால் அதுதான் இல்லை. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற அந்த படத்தை தான் ‘நீக்’ என ஆங்கிலத்தில் சுருக்கி உள்ளனர். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற அழகான பெயரை, நீளமான பெயர் என்பதற்காக இப்படி ஆங்கிலத்தில் சுருக்கி, என்னவோ போல் மாற்றி விட்டார்களே என தனுஷ் ரசிகர்களும், தமிழ் ஆர்வலர்களும் தலையில் அடித்துக்கொள்கின்றனர். இப்படியா, படத்தோட பெயரை சிதைப்பீங்க என பலரும் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்