- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதயம் முரளி படம் எப்படி இருக்குது? அது ஒண்ணு மட்டும்தான் படத்தை உட்கார்ந்து பார்க்க வைக்குது…...

இதயம் முரளி படம் எப்படி இருக்குது? அது ஒண்ணு மட்டும்தான் படத்தை உட்கார்ந்து பார்க்க வைக்குது… விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நேற்று வெளியான படம் இதயம் முரளி. நடிகர் அதர்வா நடிகை கயாடு லோஹர் மற்றும் நடிகர் ஃபக்த் பாசில் நடித்துள்ள இந்த படம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, இதயம் முரளி படத்தின் கதை என்று எடுத்துக் கொண்டால் ரொம்பவும் சுமாரான பழைய கதை தான்.

ஒரு நல்ல திரைக்கதை என்பது கதையை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டும். அதுதானே சரியான திரை கதையாக இருக்கும்? ஆனால் இந்த படத்தில் பார்த்தீர்கள் என்றால் அடுத்த அடுத்த கட்டத்திற்கு கதை நகரவே இல்லை .கதை நகரவே இல்லை. ஆனால் லொக்கேஷன் மட்டும்தான் மாறிக்கிட்டே இருக்குது.

- Advertisement -

இந்த லொகேஷனில் ஒரு பத்து பேர் ஒன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களேபேசி அவர்களே காமெடி என்று சிரித்துக் கொள்கிறார்கள். பார்க்கிற நமக்கு காமெடியாக அது தெரியுமா? என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. படத்திற்கு இதயம் முரளி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் இதயம் படத்தில் கதாநாயகன் காதலியிடம் கடைசி வரை காதலை சொல்லவே மாட்டார்.

அதனால் தான் அந்த டைட்டில் அந்த படத்துக்கு வைத்தார்கள். ஆனால் இதயம் படம் வெளியான காலகட்டம் வேற. இப்ப இருக்கிற காலகட்டம் அதுவா? ஒரு பெண்ணை பிடித்து விட்டால் சொல்ல வேண்டியது தானே? காதலிக்கிற பையனுக்கு சொல்ல பயமாக இருந்தால் கூடவே நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாவது தன்னுடைய காதலை சொல்லலாம்.

- Advertisement -

ஆனால் இவங்க என்னான்னா நாங்க காதலை சொல்லவே மாட்டோம்ன்னு கங்கணம் கட்டி வைத்திருக்கிறார்கள் போல. சின்ன சின்ன கதாபாத்திரத்துக்கும் நல்லா மக்களுக்கு தெரிந்த நடிகர்களை நடிக்க வைத்து ஒவ்வொரு காட்சிக்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டயலாக்கில் பேச வைத்துள்ளனர். ஆனால் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டார்கள்.

இங்கே கேரக்டருக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. அதுபோல் படத்தின் குறிப்பிடும்படி ஒரு சில காட்சிகள் மட்டும் நல்லா இருக்கு. வழக்கம் போல ஃபகத் பாசிலை கூட்டிட்டு வந்து அவரை வேஸ்ட் பண்ணிட்டாங்க. படத்தின் திரைக்கதை தான் மோசமாக இருந்ததே தவிர படத்தை உட்கார்ந்து பார்ப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஒளிப்பதிவு தான். படத்தை நல்லா செலவு செய்து எடுத்து இருக்கிறார்கள். ஆனால் கேரக்டருடன் தான் யாரும் கனெக்ட் ஆக முடியவில்லை என்று ப்ளு சட்டை மாறன் தனது திரை விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்