- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் என்றாலே மாஸ் தான், மீண்டும் மீண்டும் அதை நிரூபித்து வரும் லியோ - இப்போ...

விஜய் என்றாலே மாஸ் தான், மீண்டும் மீண்டும் அதை நிரூபித்து வரும் லியோ – இப்போ நடந்த தரமான சம்பவம் – அடேங்கப்பா, இது வேற லெவலா இருக்கே?

- Advertisement -

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் மிக முக்கியமானவர். குறிப்பாக, அவரது படங்களுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்பு என்பது வேற லெவலில் இருக்கிறது. ரஜினி, விஜய், அஜீத் ஆகிய மூன்று ஹீரோக்களுக்கு இருக்கிற முக்கிய ஒற்றுமை, இவர்களது தோல்வி படங்கள் கூட தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தராது என்பதுதான்.

சமீபத்தில் வெளியான லியோ படம், 540 கோடி ரூபாய் வசூலை, 12 நாட்களில் குவித்திருக்கிறது. இதையடுத்து, படத்தின் வெற்றி விழா கடந்த நவம்பர் 1ம் தேதி, நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் படத்தில் நடித்த நடிகர். நடிகையர் உட்பட ரசிகர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

- Advertisement -

விஜய் இப்போது தாய்லாந்து சென்றிருக்கிறார். அங்கு வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், வைபவ், அஜய் அஜ்மல் உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் நடித்து வருகின்றனர். இதுவும் ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒரு படமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

லியோ படத்தின் வெற்றி விழா, கடந்த 1ம் தேதி நடந்தது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி நேற்று மாலை 6.30 மணிக்கு சன்டிவி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். குறிப்பாக விஜய் பேச்சு, பரவலாக பாராட்டை பெற்றது.

- Advertisement -

லியோ வெற்றி விழா குறித்தும், அதில் விஜய் உள்ளிட்ட நடிகர் நடிகையர் பேசிய வீடியோக்கள், ஏற்கனவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எடுத்த செல்போன் வீடியோக்களாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவியது. ஆனாலும், விழாவின் முழுமையான தொகுப்பாக நேற்று சன்டிவியில் ஒளிபரப்பானதால் அனைவரும் பார்த்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

இதையடுத்து விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியோ படத்தின் வெற்றிவிழா புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள், பதிவிடப்பட்ட 18 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்