- Advertisement -
Homeபொழுதுபோக்குப்ளூ சட்டை மாறன் நடத்திய சர்வே.. போட்டியில் இடம்பெற்ற லியோ மற்றும் ஜெயிலர்.. முதல் இடம்...

ப்ளூ சட்டை மாறன் நடத்திய சர்வே.. போட்டியில் இடம்பெற்ற லியோ மற்றும் ஜெயிலர்.. முதல் இடம் யாருக்கு?

- Advertisement -

சமூக ஊடகங்ளில் இப்போதைய ஹாட் டாபிக் என்றால் அது ரஜினி vs விஜய்தான். இதற்கு முக்கிய காரணம் சூப்பர்ஸ்டார் என்ற அந்த பட்டம்தான். விஜய்யை சூப்பர்ஸ்டார் என்று ஒரு சாரரும், மற்றொரு தரப்பினர் எப்போதும் ரஜினி மட்டும்தான் சூப்பர்ஸ்டார் என்றும் கூறிவருகின்றனர். இந்த தீயில் எண்ணெய்யில் ஊற்றுவது போல் அவ்வபோது சினிமா டிராக்கர்களும் ஏதேனும் ஸ்டேட்டஸ்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் பலரும் தங்களின் கருத்துக்களையும், சூப்பர் ஸ்டார் உடனான தங்களது அனுபவும் குறித்தும் மேடையில் பதிவு செய்தனர்.

படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனோ, சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவர்களுக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என பேசி விஜய் ரசிகர்களை அதிர வைத்தார். இந்த சூடு அடங்குவதற்குள் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், ரஜினியின் ஜெயிலர் படத்தை கலாய்க்கும்படியான ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் ட்விட்டரில் நடத்திய கருத்துக்கணிப்பில் ஜெயிலர், லியோ, இந்தியன் 2, விடாமுயற்சி ஆகியவற்றில் எந்த படம் அதிக வசூலை குவிக்கப்போகிறது என்ற கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கருத்துக்கணிப்பில், லியோ 68.4 சதவிகித வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தது. ஜெயிலர் வெறும் 9.83% வாக்குகளை மட்டுமே பெற்று கடைசி இடம் பிடித்தது. அதே வேளையில் விடாமுயற்சி 11.07% வாக்குகளும், இந்தியன் 2 பத்து சதவிகிதமும் பெற்றன.

இதை கண்ட ரஜினி ரசிகர்கள் எப்போதும் போல மாறனை கலாய்க்க துவங்கி உள்ளார். அதில் ஒரு சில ரசிகர்களின் கிண்டலுக்கு மாறன் பதிலளித்துள்ளார். ஒரு ரசிகர், குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. நம்ப வேலைய பாத்துகிட்டு போயிட்டே இருக்கனும் என்று ரஜினி ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் பேசிய வசனத்தை பதிவிட, அதற்க்கு ப்ளூ சட்டை மாறன், ஆமா. அவரு ஐ.நா சபை தலைவர். இவர் அவரோட செக்ரட்டரி. 24 மணி நேரமும் வேலை செஞ்சி கழட்டுற மாதிரி. என்று பதில் அளித்துள்ளார்.

சற்று முன்