- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதை உறுதிப்படுத்திய ஆதிக் ரவிச்சந்திரன்... இன்னும் ஏகப்பட்ட அப்டேட் கொடுத்திருக்கிறாருங்க.......

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதை உறுதிப்படுத்திய ஆதிக் ரவிச்சந்திரன்… இன்னும் ஏகப்பட்ட அப்டேட் கொடுத்திருக்கிறாருங்க…. வாங்க பார்க்கலாம்….

- Advertisement -

துணிவு படத்திற்கு பிறகு அஜித்குமாருக்கு இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாமல் இருந்தது. இந்தக் குறையை தீர்க்கும் வகையில் கடந்த, ஐந்து மாதங்களில் அஜித் குமாருக்கு இரண்டு திரைப்படங்கள் வெளியாகி விட்டன. இதில் பிப்ரவரி மாதம், விடாமுயற்சி வெளியானது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக இதன் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், ஒரு வழியாக படம் வெளியாக பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் திரையரங்குக்கு சென்றனர்.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். விஷுவல் ரீதியாக படம் பிரம்மாண்டமாக இருந்தாலும், திரைக்கதை அந்த அளவு விறுவிறுப்பாக இல்லாததால் கலவையான விமர்சனத்தை பெற்றது விடாமுயற்சி. அஜித்திற்கான மாஸ் காட்சிகளையும் வைக்காதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கியிருந்த இந்தத் திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க கமர்சியலாக எடுக்கப்பட்டிருந்தது இந்த திரைப்படம்.

எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல், அஜித்தை மையப்படுத்தியே, அவரைப் புகழ்ந்து பாடும் வகையில் படத்தை நகர்த்தி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இதுபோக ரெட்ரோ பாடல்களும் படத்தில் வைக்கப்பட்டிருந்தன. குட் பேட் அக்லி பலதரப்பட்ட விமர்சனத்திற்கு ஆளானாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

- Advertisement -

கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் இந்த திரைப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் தற்போது கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், தனது அடுத்த திரைப்படத்தை அக்டோபர் மாதம் தொடங்குகிறார். இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருப்பதில் தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். குட் பேட் அக்லியிலிருந்து வித்தியாசமான கதையாக இது இருக்கும் என்றும், நிச்சயம் இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனவும் அவர் கூறி இருக்கிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தெரிவித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

- Advertisement -

சற்று முன்