- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவருடன் நடந்த ரகசிய பார்ட்டியில் கசப்பான அனுபவம்... வீடியோவை வெளியிடப் போவதாக பரபரப்பை கிளப்பிய ப்ளூ...

தலைவருடன் நடந்த ரகசிய பார்ட்டியில் கசப்பான அனுபவம்… வீடியோவை வெளியிடப் போவதாக பரபரப்பை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்…

- Advertisement -

ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் கடந்த 10-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தர்பார், அண்ணாத்த படுதோல்விக்கு பிறகு ரஜினிகாந்துக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக ஜெயிலர் அமைந்துள்ளது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் ஜெயிலர் பல சாதனைகளை படைத்து வருகிறது.

சிவராஜ்குமார், மோகன் லாலுக்கான மாஸ் காட்சிகள் படத்தில் கிளிக்கானதால் ஆந்திரா கர்நாடகா, கேரளா, மாநிலங்களிலும் படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது. படம் வெளியான ஆறு நாட்களில் மட்டும் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிலிருந்து அந்தப் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை ப்ளு சட்டை மாறன் செய்து வருகிறார்.

- Advertisement -

இசை வெளியீட்டு விழா மேடையில், ரஜினிக்கு கூறிய காகம் பருந்து கதையை குறிப்பிட்ட அவர், தன்னைத்தான் காகம் என்று கூறி ரஜினி பேசி இருப்பதாக வாண்டட் ஆக வந்து வண்டியில் ஏறினார். தொடர்ந்து ஜெயிலர் படம் வெளியானதில் இருந்தே, அவர் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒரு நாள் கூட அவர் ரஜினியை தாக்கி பேசாத நாட்கள் இல்லை என்று கூறலாம்.

இப்படிப்பட்ட சூழலில், ரஜினி தன்னை அழைத்து அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிடப் போவதாக பரபரப்பை கிளப்பி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தலைவர் ரசிகரான செய்யார் ரவி, தலைவர் இமயமலை கிளம்புவதற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். உங்களின் விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துக்களால் தலைவர் அப்செட் ஆகி இருக்கிறார். இதனால் இன்று பைவ் ஸ்டார் ஹோட்டலில், யூ டியுப் விமர்சகர்களுக்கான சந்திப்பில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று செய்யார் ரவி என்னிடம் கூறினார்.

- Advertisement -

முதலில் வருவதற்கு மறுத்த நான், அவர் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒப்புக்கொண்டேன். அதேசமயம் நிகழ்ச்சியில் செல்போன் உபயோகிக்க என்னை அனுமதிக்க வேண்டும் என்று கூறினேன். இதற்கு முதலில் மறுத்த செய்யார் ரவி பின்பு ஒத்துக் கொண்டார். செல்போன் கொண்டு வரவில்லை என்றால் இவர்கள்தான் ரஜினி காலில் விழுந்த ப்ளூ சட்டை மாறன் என்று கூறி விடுவார்களே அதற்காகத்தான் அப்படி செய்தேன். ஆனால் செல்போனில் வீடியோ எதையும் பதிவு செய்ய கூடாது என்று உத்தரவிட்டார்கள். நானும் அதனை ஒப்புக்கொண்டேன்.

ஆனால் நிகழ்ச்சியில் சில கசப்பான சம்பவங்கள் எனக்கு நடந்தன. இதனால் நான் சத்தியத்தை மீற முடிவு செய்து விட்டேன். அங்கு என்ன நடந்தது என்பதற்கான வீடியோவை, இன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறேன். எதிர்பாராத திருப்பங்களை இன்று நீங்கள் பார்க்கலாம் என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இதனால் புருவத்தை உயர்த்தி இருக்கும் ரசிகர்கள், அவர் என்ன வீடியோ பதிவிட போகிறார் என்று எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்விட்டர் பதிவில் எந்த இடத்திலும் ரஜினிகாந்த் என்ற பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்