நடிகர் சூரி காமெடி நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் பந்தயம் கட்டும் காட்சியில், சூரி நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. அதன்பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை, மனம் கொத்திப் பறவை என பல படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார்.
கத்தி, அண்ணாத்த, அஞ்சான், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சிலுக்குவார்பட்டி சிங்கம், குள்ளநரிக் கூட்டம், விவேகம் என பல படங்களில் காமெடியில் நடித்த சூரி, இப்போது நாயகனாக மாறிவிட்டார். விடுதலை படத்தில் நடித்து பெரிய வெற்றியை பெற்றார். தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி படங்களில் நடித்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கான்டஸ்பிள் குமரேசன் கேரக்டரில் நடித்த சூரி நடிப்பு வேற லெவலில் இருந்தது. இதில் ஒரு காட்சியில் கூட காமெடி சூரியை பார்க்க முடியவில்லை. பக்குவப்பட்ட ஒரு புதுமுக நடிகராக அவரை காட்டியிருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை 2 படத்திலும் சூரி நடிப்பை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.
அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படமும் சூரி நடிப்புக்கு நல்ல தீனியாக அமைந்தது. அதில் சொக்கன் என்ற கேரக்டரில் நன்றியும், விசுவாசமும் மிக்க ஒரு நண்பனாக சூரி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் முக்கிய கேரக்டரில் சசிக்குமாரும் நடித்திருந்தார்.
இந்நிலையில் கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி என்ற படத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ளனர். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். பின்னணி இசையே இல்லாத இந்த படம், பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுபோன்ற படங்களை எல்லாம் பாலுமகேந்திராவே எடுத்துவிட்டார். விருதுக்கு எல்லாம் இந்த படம் லாயக்கு இல்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறிவிட்டனர்.
இப்போது கொட்டுக்காளி படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ள சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், விவேக் – தேனி குஞ்சாரம்மாவின் பாயாசம் காமெடி புகைப்படத்தை போட்டு விடுதலை, கருடன் என்ற 2 வெற்றி படங்களை கொடுத்த சூரியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்க, சிவகார்த்திகேயன் சூரிக்கு பாயாசத்தை போட்டுவிட்டார். கொட்டுக்காளி போன்ற மொக்கையான படத்தில் நடிக்க வைத்து, சூரியின் வெற்றியை தடுத்துவிட்டார். எங்கே தனக்கே போட்டியாக சூரி வந்துவிடுவாரோ என சிவகார்த்திகேயன் இந்த வேலையை செய்துவிட்டார் என, ப்ளு சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.





