- Advertisement -
Homeபொழுதுபோக்குஓடிடி தளத்தில் தி கோட் படம் வெளியானால், எவ்வளவு நேரம் ஓடும் தெரியுமா? இயக்குனர் வெங்கட்பிரபு...

ஓடிடி தளத்தில் தி கோட் படம் வெளியானால், எவ்வளவு நேரம் ஓடும் தெரியுமா? இயக்குனர் வெங்கட்பிரபு சொன்ன ஆச்சரியமான தகவல் – ஓடிடி தளத்திலும் தளபதிக்கு செம மாஸ்தான்!

- Advertisement -

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் கடந்த 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. கடந்த நான்கு நாட்களில் தி கோட் படம் மொத்தம் 275 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

மொத்தம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் இலக்கு என்ற திட்டத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்ட படம். தி கோட் படம் தியேட்டரில் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் திரையில் ஓடுகிறது. ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மேல் படம் பார்த்த அலுப்போ சலிப்போ இல்லாத வகையில் திரைக்கதையில் பல திருப்பங்களை தந்து டைரக்டர் வெங்கட் பிரபு மிகச் சிறப்பாக இந்த படத்தை இயக்கியிருந்தார்.

- Advertisement -

படத்தில் நட்சத்திர நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களின் நடித்திருந்தனர். மேலும் விஜய் அப்பா – மகன் என்ற இரண்டு வேடங்களில், ஒருவர் நாயகனாகவும் ஒருவர் வில்லனாகவும் நடித்திருந்தது இந்த படத்துக்கு மிகப்பெரிய விறுவிறுப்பை தந்தது.

அதுவும் மகன் ஜீவன் கேரக்டரில் விஜய் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. அடுத்த மாதம் இறுதியில் ஓடிடி தளத்தில் தி கோட் படம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் ஓடிடி உரிமம் பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தி கோட் படம் தியேட்டரில் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடுகிறது. டைரக்ட் கட் ஆப் சீன்ஸ் என்ற வகையில் இந்த படம் மொத்தம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும். அதனால் ஓடிடி தளத்தில் தி கோட் படம் ரிலீஸ் ஆகும் போது அங்கு 3 மணி 40 நிமிடங்கள் நேரம் படம் ஓடும் என்று கூறியிருக்கிறார்.

அதாவது தியேட்டரில் திரையில் வராத 37 நிமிட காட்சிகள் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த 37 நிமிடங்களையும் சேர்த்து படத்தில் காண முடியும். தியேட்டரில் காண முடியாத 37 நிமிட காட்சிகள் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. அதனால் ஓடிடி தளத்திலும் தி கோட் படத்தை ரசிகர்கள் மிக ஆவலாக பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

சற்று முன்