- Advertisement -
Homeபொழுதுபோக்குகழுகு குஞ்சுகளே… நடிகர் விஜயை பார்த்து ஏன் கதறீங்க? - ரஜினி ரசிகர்களை பங்கமாக கலாய்த்த...

கழுகு குஞ்சுகளே… நடிகர் விஜயை பார்த்து ஏன் கதறீங்க? – ரஜினி ரசிகர்களை பங்கமாக கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ரஜினியும் கமலும் ஒன்றாக பல படங்களில் நடித்தனர். ஆனால் அவர்களே ஒரு கட்டத்தில் இருவரது வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு பிரிந்து தனித்தனியாக நடிக்க முடிவு செய்தனர். ஒருபுறம் ரஜினி படங்கள் மறுபுறம் கமல் படங்கள் என 1980 90களில் வசூலில் பட்டைய கிளப்பின. அந்த நேரத்தில் ரஜினி கமல் இருவரும்தான் போட்டியாளர்கள் என்ற நிலை தமிழ் சினிமாவில் இருந்தது.

அதன்பிறகு நடிகர் விஜய் நடிக்க வந்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகராக மாறினார். கில்லி படத்துக்கு பிறகு தொடர்ந்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்து ஆக்சன் ஹீரோவாக அசத்தினார். விஜய் நடித்த படங்கள் வசூலில் ரஜினிகாந்த் படங்களையே முந்தி காட்டின. இதனால் வாரிசு படவிழாவில் பேசிய சிலர், வசூலில் நடிகர் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என பேசியது ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றியது.

- Advertisement -

அந்த நேரத்தில் விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் காக்கா கழுகு கதை சொன்னது இன்னும் விவகாரத்தை பெரிதாக்கியது. சூப்பர் ஸ்டார் விஜயா, ரஜினியா என்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இதுகுறித்து நடிகர்கள் விஜய் ரஜினிகாந்த் இருவருமே விளக்கம் அளித்து விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், இன்னும் அவர்களது ரசிகர்களுக்குள் போட்டி தீரவில்லை.

அதனால் அப்போது முதல் ரஜினி படம் ரிலீஸாகும்போது விஜய் படங்களுடன் வசூலில் ஒப்பிடுவது, விஜய் படம் வெளியாகும்போது ரஜினி படத்தின் வசூலுடன் ஒப்பிடுவது நடந்து வருகிறது. விஜய் பட சாதனையை ரஜினி முறியடித்தார், ரஜினி பட சாதனையை விஜய் முறியடித்தார் என்பது அந்த நேரங்களில் இணையத்தில் வைரலாகி விடுகிறது. இது இப்போது கூலி படம் வரை தொடர்கிறது. லியோ சாதனைகளை முறியடித்த கூலி என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, கழுகு குஞ்சுகள்; மாஸ்டரை வீழ்த்திய ஜெயிலர், லியோ கலெக்சனை தாண்டிய கூலி, உங்க தலைவரை இந்திய சூப்பர் ஸ்டார்ன்னு சொல்றீங்க. அப்படிப் பார்த்தா அமிதாப்பச்சன் ஷாருக்கான் சல்மான்கான் கூடத்தானே மோதணும்?

உங்க தலைவரை விட வயசுலேயும் சினிமா அனுபவத்திலேயும் பல வருஷம் சின்னவரா இருக்கிற விஜயை பார்த்து ஏன் ஓயாமல் கதறிட்டு இருக்கீங்க என்று அந்த பதிவில் ப்ளு சட்டை மாறன் கேள்வி எழுப்பி இருக்கிறார். ரஜினி ரசிகர்களை கழுகு குஞ்சுகள் என்று குறிப்பிட்டு அவர் எழுப்பியிருக்கிற இந்த கேள்வி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதீத கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்