தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. வியாபாரி கல்லூரி படிக்காதவன் வேங்கை பையா சுறா வீரம் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார். பிறகு தெலுங்கு படங்களில் நடித்த அவர் இந்தியிலும் கால் பதித்தார். இந்தி வெப் சீரிஸ்களில் தாராளமாக கவர்ச்சியான காட்சிகளில் நடித்து பாலிவுட் ரசிகர்களை கவர்ந்தார்.
இதற்கிடையே தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காவலய்யா என்ற பாடல் காட்சியில் குத்தாட்டம் போட்டார். இந்த பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆகி அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. இசை கச்சேரிகள் மற்றும் விஐபி இல்லங்களில் நடக்கும் திருமண விழாக்களில் இந்த பாடலுக்கு ஆட தமன்னாவுக்கு ரூ. 1.5 கோடி வரை சம்பளம் தரப்படுகிறது.
இந்தியில் வெப்சீரிஸ்சில் நடித்த போது அவருக்கு ஜோடியாக விஜய் வர்மா என்பவருடன் நடித்த போது அவர்களுக்குள் நெருக்கமான பழக்கமும் நட்பும் ஏற்பட்டது. பிறகு இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக டேட்டிங் சென்றனர். தமன்னா, விஜய் வர்மா காதல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சில தினங்களாக விஜய் வர்மா, தமன்னா இருவரும் பிரிந்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இருவரும் முன்பு போல் பொது இடங்களில் ஒன்றாக காணப்படுவதில்லை என்றும், தமன்னா தனியாக தான் வந்து செல்கிறார். மேலும் அவர்களது இணையதள பக்கங்களில் இருவரும் ஜோடியாக இருந்த வீடியோக்களும் புகைப்படங்களும் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது விஜய் வர்மா, தமன்னா காதல் பிரிவுக்காக காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை தமன்னா, இந்த 2025ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று விஜய் வர்மாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவர், இப்போது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. இன்னும் சில ஆண்டுகள் கழித்து செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இந்த முடிவை நடிகை தமன்னா ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இருவருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் அவர்கள் இருவரது பிரிவுக்கும் காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் வர்மா, வேறொரு நடிகையுடன் சமீபமாக டேட்டிங் செல்வதாலும் தமன்னா, அவரை பிரியும் முடிவை எடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன் காரணமாகவே தன்னை திருமணம் செய்துக்கொள்ள தமன்னா விஜய் வர்மாவை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.





