- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்தகன் படம் குறித்து விமர்சித்த ப்ளு சட்டை மாறன், அந்தாதூன் பற்றியும் இப்படி பேசியிருக்கிறாரே? -...

அந்தகன் படம் குறித்து விமர்சித்த ப்ளு சட்டை மாறன், அந்தாதூன் பற்றியும் இப்படி பேசியிருக்கிறாரே? – ஹீரோ பிரசாந்த், டைரக்டர் தியாகராஜன் ஜெயித்தார்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் டாப் ஸ்டார் நடிகராக முன்னணியில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமான பிரசாந்த் ஜீன்ஸ், திருடா திருடா, கண்ணெதிரே தோன்றினாள், ராசாமகன், செந்தமிழ் செல்வன், வண்ணவண்ண பூக்கள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

ஆனால் குடும்ப வாழ்வில் நடந்த சில கசப்பான அனுபவங்களால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட பிரசாந்த், ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்து விட்டார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் பொன்னர் சங்கர். அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அந்தகன் படம் நேற்று ரிலீஸாகி உள்ளது.

- Advertisement -

நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன்தான் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டில் வெளியான அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக் உரிமையை அவரே வாங்கி இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகிபாபு, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் அந்தகன் படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, அந்தகன் படத்தை எடிட் செய்தவரை பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் அந்ததூன் படத்தில் ஆரம்பத்தில் தேவையற்ற பல காட்சிகள் இருக்கும். அதெல்லாம் இந்த படத்தில் வராமல் எடிட் செய்து முதல் பாதியில் படத்தை விறுவிறுப்பாக தந்துள்ளனர்.

- Advertisement -

அதே போல் இரண்டாம் பாதியில், அந்ததூன் படத்தை அப்படியே எடுத்து இயக்கி, படத்தை ரசிக்கும்படி தந்துள்ளனர். இந்த விஷயத்தில் கொஞ்சம் ஸ்லோ செய்திருந்தாலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்காது. சிம்ரன், பிரசாந்த் நடிப்பு முதல் பாதியை விறுவிறுப்பாக மாற்றியுள்ளது. இரண்டாம் பாதியில் அந்ததூன் படத்தில் கிட்னி திருடுகிறேன், சட்னி திருடுகிறேன் என மொக்கை செய்திருப்பர். அதை தமிழில் எடுத்த போது மாற்றி இருக்கலாம். அப்படியே வைத்துவிட்டனர்.

இந்த விஷயத்தை பொருத்தவரை அந்தகன் படத்தில் பிரச்னை இல்லை. அந்தாதூன் படத்தில்தான் பிரச்னை இருக்கிறது. அந்தகன் சூப்பருக்கும், சுமாருக்கும் இடைப்பட்ட படமாக உள்ளது. நடிகர் பிரசாந்துக்கு இந்த படம் கம்பேக் தான். அடுத்தடுத்த படங்களை இன்னும் அவர் சிறப்பாக கொடுப்பார் என்ற நம்பிக்கையை இந்த படம் தருவதால், தியேட்டரில் அந்தகன் படத்தை பார்க்கலாம் என, பாஸிட்டிவ் விமர்சனம் தந்துள்ளார் ப்ளு சட்டை மாறன்.

- Advertisement -

சற்று முன்