- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழில் ஒரு பேச்சு, தெலுங்கு நிகழ்ச்சியில் ஒரு பேச்சு... தங்கலான் குறித்து என்ன சொல்ல வருகிறார்...

தமிழில் ஒரு பேச்சு, தெலுங்கு நிகழ்ச்சியில் ஒரு பேச்சு… தங்கலான் குறித்து என்ன சொல்ல வருகிறார் விக்ரம்… குழப்பத்தில் ரசிகர்கள்…

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து, விக்ரம் அடுத்ததாக பா ரஞ்சித்துடன் இணைந்துள்ளார். தங்கலான் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் கதைக்களம் நடப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் விக்ரம் நீண்ட முடி, அடர்ந்த தாடி என மிரட்டலான லுக்கில் வருகிறார். படத்தில் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தங்கலான் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. போர்க்களம் சண்டை என வேறு லெவலில் டீசர் இருப்பதாகவும், விக்ரம் தோற்றம் மிரட்டலாக உள்ளது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் டீசர் வெளியீட்டு விழாவில் சீயான் விக்ரம் பேசியதாவது, தங்கலான் திரைப்படம் சாதாரண மற்ற திரைப்படங்களைப் போன்று இருக்காது. தேசிய அளவில் இதற்கு பாராட்டு கிடைக்கும். இந்திய சினிமாவில் கண் திறந்து விட்ட திரைப்படம் தங்கலான் என்றே கூறலாம். படப்பிடிப்பின் போது கே ஜி எஃப் மக்களுடனேயே வாழ்ந்தேன். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக மக்களை குறித்து இந்த படம் பேசுகிறது.

- Advertisement -

அவர்களின் வாழ்க்கை முறை, வலி, மகிழ்ச்சி போன்றவற்றை ஒவ்வொருவரும் பார்க்கலாம். நாங்கள் காலையில் ஆரம்பித்தால் இரவு வரை சூட்டிங் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டே இருப்போம். ஓய்வெடுக்க சிறிது நேரம் கூட எங்களுக்கு இருக்காது. சூட்டிங் நடைபெறும் இடத்திலும் எங்கையுமே நாற்காலி இருக்காது. பிதாமகன், ராவணன், ஐ போன்ற திரைப்படங்களில் மிகவும் கஷ்டப்பட்டு நான் நடித்தேன். ஆனால் இந்த படத்திற்கு நான் மேற்கொண்டிருக்கும் கடினத்தில் மூன்று சதவீதம் கூட அந்த படங்களில் இருக்காது.

தங்கலான் படத்திற்காக பழங்கால மொழிகளை தொடர்வதற்கும், உச்சரிப்பதற்கும் மிகுந்த சிரமமாக இருந்தது என்று தெரிவித்தார். இதனிடையே தெலுங்கு டீசர் நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு எந்த ஒரு டயலாக்குமே இருக்காது என்று கூறி இருக்கிறார். விக்ரமின் இந்த பேச்சுதான் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் பழங்கால மொழிகளை கற்பதில் கஷ்டம் இருந்ததாக கூறியிருக்கும் அவர், தெலுங்கில் தனக்கு டயலாக்கை இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இதனால் குழம்பிப் போய் இருக்கும் ரசிகர்கள் படம் ரிலீஸ் ஆனால்தான் என்னவென்று தெரியும் என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்