- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்துல நீங்க, எங்க தலைவர்கிட்ட நெருங்க முடியலையே - அஜீத் ரசிகர்களை வம்பிழுக்கும் விஜய்...

இந்த விஷயத்துல நீங்க, எங்க தலைவர்கிட்ட நெருங்க முடியலையே – அஜீத் ரசிகர்களை வம்பிழுக்கும் விஜய் ரசிகர்கள் – அட ஆமாம்பா, இது உண்மைதானே?

- Advertisement -

அன்று எம்ஜிஆர் சிவாஜி, அதற்கு பிறகு ரஜினி கமல், இப்போது விஜய் அஜீத் இப்படித்தான் தமிழ் சினிமாவில் ஒரு தரப்பு ரசிகர்கள் எப்போதுமே பிளவுபட்டு நிற்கின்றனர். இதுதவிர எந்த நடிகர் நடித்தாலும், படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம் என்ற பொதுவான சினிமா ரசிகர்களும் இருக்கின்றனர்.

அதனால் தான் ரஜினி, கமலை ரசித்தவர்களால் ராமராஜன், முரளி படங்களையும் ரசிக்க முடிந்தது. சினிமாவை பொருத்த வரை பொழுதுபோக்கு அம்சமாக, நேரத்தை இனிமையாக கழிக்கும் ஒரு ஊடகமே தவிர, இதில் போட்டி, பொறாமை, வெற்றி தோல்வி என்பதெல்லாம் ரசிகர்களுக்கு கிடையாது. இதை எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜீத் தெளிவாக புரிந்திருப்பதால் அவர்கள் ஒற்றுமையாக இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். ஆனால் ரசிகர்கள்தான் இரு தரப்பாக பிரிந்து நிற்கின்றனர்.

- Advertisement -

சமீபமாக சமூக வலைதளங்களில் அஜீத் படம் வெளியாகும் போது, விஜய் ரசிகர்கள் அஜீத் படத்தை கிண்டலடித்து மீம்ஸ் போடுவதும், விஜய் படம் வெளியாகும் போது அஜீத் ரசிகள்கள், விஜய் படத்தை கலாய்த்து மீம்ஸ் போடுவதும் தொடர்ந்து நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. இது பொதுவான ரசிகர்களுக்கு வருத்தத்தை, பல நேரங்களில் எரிச்சலையும்தான் ஏற்படுத்துகிறது.

துவக்கத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் அஜீத், விஜய் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அஜீத் சங்கீதா திருமண விழாவில் அஜீத் பங்கேற்றார். அஜீத் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இப்போதும் அவர்கள் நல்ல நண்பர்களாக, சில இடங்களில் சந்தித்து பேசலாம். பழகலாம். அவர்களுக்குள் நல்ல நட்பும், தோழமையும் கண்டிப்பாக இருக்கலாம். ஆனால் அதை வெட்டவெளியில்தான் அவர்கள் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஒரு புது விஷயத்தை விஜய் ரசிகர்கள் கையில் எடுத்து, அஜீத் ரசிகர்களை கலாய்க்க துவங்கியிருக்கின்றனர். அதாவது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இப்போது நடித்து வரும் விஜய் 68 படத்துக்கு, விஜய் வாங்குகிற சம்பளம் ரூ. 200 கோடி. அதே வேளையில் அஜீத் விடாமுயற்சி படத்துக்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்துக்கு அஜீத் பெறுகிற சம்பளம் ரூ. 165 கோடி தான்.

அதாவது இதுவரை விஜய், அஜீத் நடித்து வெளியாகும் புதுப்படங்களின் வசூல் வேட்டையை வைத்து சண்டையிட்டு கொண்டிருந்த விஜய் ரசிகர்கள், இப்போது அஜீத்தை விட விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார். விஜய் சம்பளம் ரூ. 200 கோடி, அஜீத் சம்பளம் ரூ. 165 கோடி. எங்கள் தலைவரை விட, அஜீத் 35 கோடி ரூபாய் குறைவாக தான் வாங்குகிறார். சம்பள விஷயத்தில், எங்கள் தலைவரே டாப் என, சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள், அஜீத் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்