இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் நேற்று வெளியானது. காதல் ஆகசன் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் மதராஸி படம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, படத்தின் துவக்கத்தில் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் ஆயுத கலாச்சாரத்தை கொண்டு வர ஒரு குழு முயற்சிக்கிறது.
இதை எப்படியோ தெரிந்து கொண்ட என்ஐஏ அதிகாரி ஒருவர் அதை தடுக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். அதையும் கடந்து அந்த ஆயுதங்கள் தமிழ்நாட்டுக்குள் வந்துவிடுகிறது. அந்த ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்றால் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினால் தான் முடியும் என்று அதிகாரி முடிவு செய்கிறார்.
இந்த சமயத்தில் படத்தின் நாயகன் காதல் தோல்வியாய் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். இதை பார்த்த அந்த அதிகாரி தனது குழுவில் இருப்பவரை இழப்பதற்கு பதிலாக கதாநாயகனை தற்கொலைப்படையாக மாற்றிவிடலாம் என்று முயற்சி செய்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் மதராஸி படத்தின் கதை. இந்த படத்தை பார்க்கும் போதே கஜினி மற்றும் துப்பாக்கி படத்தை மிக்ஸ் செய்து ஒரு படம் எடுத்தது போல இருந்தது.
இதுபோன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். உதாரணமாக துப்பாக்கி படத்தை போல இருக்க வேண்டும். துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சிக்கு தியேட்டரே அதிரும் அளவுக்கு ஆரவாரம் இருந்தது. ஆனால் இந்த படத்தில் இடைவேளையில் படமே முடிந்து விட்டது என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதை இருந்தது. கதாநாயகன் எதற்காக தற்கொலை செய்து கொள்வாரோ அந்த வேலையும் முடிந்து விடும். ஐஎன்ஏ அதிகாரி கதாநாயகனிடம் ஒரு வேலையை செய்யச் சொல்வார். அதை மட்டும் ஒழுங்காக செய்திருந்தால் படம் அங்கேயே முடிந்திருக்கும்.
படத்தை அங்கேயே முடிக்காமல் 2ம் பாதியில் சரியான கதையும் திரைக்கதையும் இல்லாமல் நல்ல படம் ஒரு சுமாரான படமாக மாறிவிட்டது. படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் நன்றாக இருந்தது. கதாநாயகன் எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு புரிய வைக்கும் விதமும் நன்றாக இருந்தது. ஹீரோ ஹீரோயின் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் எல்லாமே நன்றாக இருந்தது. கதாநாயகனுக்கு ஒரு பிளாஸ்பேக் இருக்கிறது. அது ஒர்க் அவுட் ஆகவே இல்லை.
படத்தில் சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தது. தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை கொண்டுவர பார்க்கிறார்கள் என்று சொல்லி பயமுறுத்தி படத்தை தொடங்கிவிட்டு இவர்கள் கொண்டுவந்த துப்பாக்கியை வைத்து சுட்டால் கதாநாயகியும் சாகலே கதாநாயகனும் சாகலே வில்லனும் சாகலே. சுடப்பட்ட எல்லாரும் அடுத்த காட்சியில் எழுந்து வந்து விடுகிறார்கள். இந்த துப்பாக்கியை எதுக்கு விற்பனை செய்ய வந்தார்கள் என்று தெரியவில்லை. பொம்மை துப்பாக்கி என்று விற்க அனுமதித்திருக்கலாம். இப்படி ஒரு படமும் எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று ப்ளு சட்டை மாறன் கிண்டலாக விமர்சனம் செய்திருக்கிறார்.





