- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன்கிட்ட இருந்து கத்துக்கங்க… நீங்க இப்படி இருந்தா தவெக தேர் முன்னோக்கி நகராது… -...

கேப்டன்கிட்ட இருந்து கத்துக்கங்க… நீங்க இப்படி இருந்தா தவெக தேர் முன்னோக்கி நகராது… – நடிகர் விஜய் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிய பிரபலம்!

- Advertisement -

கடந்த சனிக்கிழமை இரவு கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த நிலையில் இந்த துயர சம்பவம் குறித்து ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில், விஜய் செய்த தவறுகள் என்ற தலைப்பில் லிஸ்ட் போட்டு கூறியிருப்பதாவது, மரம் மின்சார கம்பங்கள் கட்டடங்கள் என அனைத்திலும் சகட்டுமேனிக்கு ஏறும் ரசிகர்களை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து தோற்பது.

விழுப்புரம் மாநாடு நடந்த நேரத்தில் இறந்த தொண்டர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறில் ஆறுதல் கூறாதது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் பனையூர் ஆபீசுக்கு வர வைத்தது, மீடியாவை ஒரு முறை கூட சந்திக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருவது, மொக்கையான நபர்களை ஆலோசர்களாக வைத்திருப்பது.

தவெகவில் இருப்பவர்களில் 95 சதவீதம் பேர் ரசிகர்கள் மட்டுமே, பொறுப்புள்ள தொண்டர்களாக இன்னும் மாறவில்லை என்பதை உணராதது. இவற்றுக்கெல்லாம் முன்மாதிரியாக கோயம்பேடு ரோகிணி தியேட்டர் இருக்கைகள் அனைத்தையும் உங்கள் ரசிகர்கள் நாசம் செய்த போது அதை கண்டிக்காமல் அமைதி காத்தது. அந்த பாதிப்பிற்கு நஷ்ட ஈடு தராதது.

எப்டிஎப்எஸ் நள்ளிரவு காட்சிகளின் போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்புண்டு என உணர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பேசி காலை காட்சிகள் மட்டுமே போதும் எனக் கூறாதது. பிளாக்கில் டிக்கெட் விற்பனை நடக்கும்போது என் ரசிகர்கள் யாரும் பிளாக் டிக்கெட் வாங்க வேண்டாம், அரசு நிர்ணயித்த இந்த ரேட்டில் மட்டுமே வாங்குங்கள் என அறிவுறுத்தாதது.

இந்த சினிமா சார்ந்த விதிமீறல்களுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் ரசிகர்களை முறைப்படுத்தாமல் வேடிக்கை பார்த்ததன் பலன் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகும் அனுபவிக்க வேண்டி உள்ளது. இன்னும் ஸ்ட்ராங்காக நம் அரசியல் பயணம் தொடரும் என உங்கள் ரசிகர்களுக்கு செய்தி கூறியுள்ளீர்கள். அவர்களை ஒழுங்குபடுத்தாத வரை… தவெக என்ற தேர் முன்னோக்கி நகர வாய்ப்பில்லை.

மேலும், விஜயகாந்திடம் கற்றுக்கொள்ள வேண்டியவை என்ற தலைப்பில், எதுக்கு அங்க தொங்கிட்டு இருக்கே, அவனை இறக்கி விடுங்கய்யா என நாக்கை துருத்தி கேப்டன் ஒரு சவுண்டு விட்டால் அடுத்த நிமிடம் அந்த தொண்டர் இறங்கிவிடுவார் அல்லது இறக்கி விடப்படுவார். கமெண்ட் ஆளுமை திறன் இருப்பதால்தான் அவர் கேப்டன். ஆர்வக்கோளாறு தொண்டர்களை ஸ்பாட்டில் கண்ட்ரோல் செய்துவிட்ட பிறகுதான் மீண்டும் மைக்கில் பேச்சை தொடருவார். இது விஜய் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடங்களில் ஒன்று என்றும் அந்த பதிவில் ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

சற்று முன்