- Advertisement -
Homeபொழுதுபோக்கு14 மணிநேரம் நீருக்குள் கிடந்த கார்த்தி பட நடிகை, இப்படி உயிரை பணயம் வச்சி நடிச்சிருக்காங்களே

14 மணிநேரம் நீருக்குள் கிடந்த கார்த்தி பட நடிகை, இப்படி உயிரை பணயம் வச்சி நடிச்சிருக்காங்களே

- Advertisement -

தமிழில் “யுவன்”, “தடையறத் தாக்க” ஆகிய திரைப்படங்களின் மூலம் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் கார்த்தி நடித்த “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிக பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து “என் ஜி கே”, “அயலான்” போன்ற திரைப்படங்களில் நடித்த அவர், தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக அறிமுகமானது கன்னட சினிமாவில்தான். அதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் “Boo” என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த மே மாதம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது.

- Advertisement -

இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது “ஐ லவ் யூ” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வருகிற 16 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக ரகுல் பிரீத் சிங் தனது உயிரையே துச்சம் என எண்ணி நடித்திருக்கிறார்.

அதாவது இத்திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங், இரண்டு நிமிடங்கள் மூச்சை அடக்கியபடி நீருக்கு அடியில் இருப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம். அந்த காட்சிக்காக ரகுல் பிரீத் சிங் கடுமையாக பயிற்சி எடுத்தாராம். ஜஹான் அட்டன்வாலா என்ற ஸ்கூபா பயிற்சியாளர் ஒருவர் ரகுல் பிரீத் சிங்கிற்கு தண்ணீருக்குள் மூச்சை அடக்கும் பயிற்சியை கற்றுத்தந்தாராம்.

- Advertisement -

அந்த ஒரு காட்சிக்காக கிட்டத்தட்ட 14 மணி நேரங்கள் நீருக்குள் இருந்தாராம் ரகுல் பிரீத் சிங். ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் அவர் மீது வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றுவார்களாம். அந்தளவுக்கு அவருக்கு குளிர் இருந்ததாம். மேலும் தண்ணீருக்குள் இருந்தபோது அந்த நீரில் கலக்கப்பட்டிருந்த குளோரின் காரணமாக அவரது கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாம். அதனையும் பொறுத்துக்கொண்டு அந்த காட்சியில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்