- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி திரைப்படத்தில் ரஜினியுடன் குத்தாட்டம் போட காத்திருக்கும் நடிகை... ஏராளமான சஸ்பென்ஸ்களை வைத்து மௌனம் காத்து...

கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் குத்தாட்டம் போட காத்திருக்கும் நடிகை… ஏராளமான சஸ்பென்ஸ்களை வைத்து மௌனம் காத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக அவர் விஜயுடன் இணைந்து லியோ படத்தை எடுத்திருந்தார். அப்போது படத்தின் அறிவிப்பின்போதே அது எந்த தேதியில் வெளியாகும் என்பதை கூறியிருந்தார். ஆனால் இந்த முறை அவ்வாறு செய்யவில்லை லோகேஷ் கனகராஜ்.

தேதியை முன் கூட்டியே அறிவிப்பது மூலம் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாவதால், இந்த முறை படத்தை மெதுவாக இயக்கி வருகிறார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் துறைமுகம் அருகே பிரம்மாண்ட செட் போட்டு முக்கியமான காட்சிகளை லோகேஷ் எடுத்தார்.

தங்கக் கடத்தலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவது, அதன் அறிமுக டீசரிலேயே தெரியவந்தது. பீரியட் திரைப்படமாக இதை லோகேஷ் கனகராஜ் எடுத்து வருகிறார். வழக்கம்போல் இந்த திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அண்மையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்திலிருந்து சிக்குடு பாடலில் இரண்டு வரிகளையும் படக்குழு வெளியிட்டது. அதில் ரஜினிகாந்தின் நடன அசைவுகள் பலரையும் கவரும் வகையில் இருந்தது. இதில் தேவா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

வில்லனாக வருகிறார் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா. கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சோபின் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்துடன் கைகோர்த்து இருக்கிறார் சத்யராஜ். அவருக்கு மகளாக சுருதிஹாசன் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படபிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்கனவே, அமீர்கான் இருப்பது உறுதியாகிவிட்டது. ஜெய்ப்பூரில் அதற்கான காட்சிகளை படமாக்கினார்கள். இந்த நிலையில் பாடல் ஒன்றுக்கு, பிரபல நடிகை பூஜா ஹெக்டேவுடன் ரஜினிகாந்த் குத்தாட்டம் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது போக ஏகப்பட்ட சஸ்பென்சுகளையும் லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பதாகவும், படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கும் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

சற்று முன்