- Advertisement -
Homeபொழுதுபோக்குகறி வாங்க காசு இல்லையா? கதை எழுத துப்பில்லாத ஒருவர் கதை எழுதினாரா? - கூலி...

கறி வாங்க காசு இல்லையா? கதை எழுத துப்பில்லாத ஒருவர் கதை எழுதினாரா? – கூலி படம் குறித்து கடுமையாக விமர்சித்த ப்ளு சட்டை மாறன்!

- Advertisement -

நேற்று முன்தினம் வெளியான கூலி படம் 230 கோடி ரூபாய் என்ற வசூலை 2 நாட்களில் கடந்திருக்கிறது. ஏற்கனவே முன்பதிவில் இந்த படம் 110 கோடி ரூபாய் மேல் வசூலித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ரஜினி படம் என்றாலே கிடைக்கும் மாஸ் வரவேற்பு கூலிக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் படம்தான் கடும் விமர்சனத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூலி படம் குறித்து கூறியதாவது, நண்பன் கொலை செய்யப்பட்டதால் பழிவாங்க ஹீரோ வருவது தான் இந்த படத்தின் கதை. பான் இந்தியா படம் என்றால் நேட்டிவிட்டியோடு எடுத்து அது நம்ம ஊரிலும் ஹிட் ஆக வேண்டும், இந்திய அளவிலும் உலக அளவில் ஹிட்டாக வேண்டும்.

- Advertisement -

அதுதான் பான் இந்தியா ஹிட் என்று சொல்லப்படும். ஆனால் ரஜினியோ மற்ற மொழி நடிகர்களை தன் படத்தில் சேர்த்துவிட்டு பான் இந்தியா படம் என்று சொல்கிறார். உடனே இயக்குநரிடம் இந்த ஸ்டார்களெல்லாம் படத்தில் இருக்கிறார்கள். எனவே அதற்கு தகுந்தபடி கதை எழுதி வரவும் என்று சொல்லியிருப்பார்கள் போல.

கிராமத்தில் கறி வாங்க காசு இல்லாதவனே கருவாட்டை கண்டுபிடித்திருப்பான் என்று சொல்வார்கள். அது போல கதை எழுத துப்பில்லாத ஒருவர்தான் இந்த கதையை எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது. லோகேஷ் கனகராஜூக்கு கொலை கஞ்சா பவுடர் கடத்துவதை தவிர்த்து எதுவும் தெரியாது. அப்படிப்பட்ட லோகேஷ் இந்த மூன்று மணி நேரத்தை ரசிகர்கள் எப்படி கடத்துவார்கள் என்பதை யோசித்துப் பார்த்து படம் எடுத்து இருக்கலாம்.

- Advertisement -

நாகர்ஜூனாவை ஸ்டைலிஷ் வில்லனாக காண்பித்திருக்கிறார். அவருக்கு கீழே சௌபின் சாஹிரை காண்பித்திருக்கிறார். இரண்டு பேரில் சௌபின் மட்டுமே கிடைத்த கேப்பில் ஏதோ செய்திருக்கிறார். ரஜினி நடத்தும் மேன்ஷனில் எதுக்காக சிலர் உள்ளே இருக்கிறார்கள் என தெரியவில்லை. உபேந்திரா எல்லாம் எவ்வளவு பெரிய டெக்னீசியன்? அவரை அழைத்து வந்து நாசம் செய்திருக்கிறார்கள். அவர் யார் என்றே படத்தில் தெரியவில்லை.

கடைசியில் அமீர்கான் வருகிறார். அவர் வந்து பீடியின் சுவைகளைப் பற்றி பேசுகிறார். இந்த படத்தால் ஜெயிலர் படம் நல்ல படம் ஆகிவிட்டது. பொதுவாக மொக்கை படம் என்று நினைத்து போய் பார்த்தால் அந்த படம் நன்றாக இருக்கும். இந்த படத்தை நீங்கள் காட்டு மொக்கை என்று நினைத்து பார்த்தாலுமே உங்களுக்கு படம் பிடிக்காது என்று ப்ளு சட்டை மாறன் தனது கடுமையான விமர்சனத்தை அந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார். இது இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்