- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பிறந்த நாளில் அஜீத்குமாரை போட்டுத் தாக்கிய பிரபலம் - எனக்கு பப்ளிசிட்டியே பிடிக்காது, ஆனா...

விஜய் பிறந்த நாளில் அஜீத்குமாரை போட்டுத் தாக்கிய பிரபலம் – எனக்கு பப்ளிசிட்டியே பிடிக்காது, ஆனா 365 நாளும்…. – அவர் சொல்றதும் நிஜம்தானோ?

- Advertisement -

நடிகர் விஜய், இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். ஆனால் மிக பிரமாண்டமாக பல நிகழ்ச்சிகளை இன்று ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் நடந்த அந்த கள்ளச்சாராயம் துயரச் சம்பவம் காரணமாக, பிறந்த நாள் விழாவை பெரிதாக கொண்டாட வேண்டாம் என நடிகர் விஜய், நேற்றே தனது எக்ஸ் பக்கத்தில் தெளிவாக அறிவித்து விட்டார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான பிறகு கொண்டாடப்படும் பிறந்த நாள், அதுவும் 50வது பிறந்தநாள் என்பதால் பெரிய அளவில் அமர்க்களப்படுத்தி விடலாம் என்று ஆசைப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு. இது பலத்த ஏமாற்றத்தை அளித்து விட்டது. அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்தான் இன்று டிரண்டிங் ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே போல் நடிகர்கள் கமல்ஹாசன், பிரபுதேவா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கோட் படக்குழு உள்ளிட்ட பலரும், நடிகர் விஜய்க்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தனர். தி கோட் படத்தில், இரண்டு விஜய்க்கள் பைக்கில் பறக்கும் ஒரு வீடியோ காட்சியும் இன்று வெளியாகி அனல் பரப்பியது.

நடிகர் விஜய்க்கு, தமிழ் சினிமாவில் போட்டியாளராக கருதப்படுபவர் நடிகர் அஜீத்குமார். எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல் போல, இன்றைய தமிழ் சினிமாவில் விஜய், அஜீத் இருவரும்தான் போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். இந்த சூழலில், விஜய்க்கு போட்டியாக, அஜீத்குமாரும் சில விஷயங்களை மறைமுகமாக செய்து வருவதாக விமர்சனம் இருந்து வருகிறது.

- Advertisement -

இன்று விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அஜீத்குமார் குறித்த ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில், சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். வழக்கமாக சினிமா படங்களை மட்டுமே விமர்சனம் செய்யும் அவர், சில நேரங்களில் இதுபோன்று நடிகர், நடிகைகள் குறித்தும் தனது கிண்டலான பதிவுகளை செய்து, பரபரப்பை ஏற்படுத்துவார்.

இன்றைய பதிவில் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, எனக்கு பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது. அதான் ஆடியோ லாஞ்ச், அவார்டு பங்ஷனுக்கு எல்லாம் போறது இல்லை. ஆனா வருஷத்துக்கு 365 போட்டோ மட்டும் சோஷியல் மீடியால வரணும். குறிப்பா விஜய் படத்தோட ட்ரைலர் வர்றப்ப, ஆடியோ லாஞ்ச், ரிலீஸ் தேதி, பர்த்டே டைம்ல, என் போட்டோ வந்தாகணும். இன்னைக்கு என்ன போட்டிருக்க, போன ட்வீட்டை பாருங்க தல, என்று ஐயா படத்தில் வடிேவலு, மதன்பாப் காமெடி காட்சி புகைப்படத்துடன் பதிவிட்டு பங்கம் செய்திருக்கிறார் ப்ளு சட்டை மாறன்.

- Advertisement -

சற்று முன்