- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக ஆளுநரை பார்க்க சென்ற தவெக தலைவர் விஜய், அவருடன் சென்ற ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்...

தமிழக ஆளுநரை பார்க்க சென்ற தவெக தலைவர் விஜய், அவருடன் சென்ற ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. சென்சார் பிரச்னை காரணமாக இந்த படம் இதுவரை திரைக்கு வரவில்லை. ஆனால் கடந்த மாதமே இணையத்தில் ஜனநாயகன் படம் லீக் ஆகி விட்டது.

ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்த 9 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கோவைக்கு அருகில் உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்த லோக்கல் கேபிள் ஆபரடே்டர் ஒருவர் இந்த படத்தை லோக்கல் சேனலில் ஒளிபரப்பிய நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இப்போது தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் ஒரு சூழல் உருவாகி உள்ளது. இன்று மாலை 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை விஜய் தமிழக கவர்னரிடம் கொடுத்தால் அவர் விஜயை ஆட்சியமைக்க அழைப்பார். பிறகு வரும் நாளில் அவர் தமிழக முதல்வராக பதவியேற்பது உறுதி.

ஆனால் ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ் என்பது மட்டும் இன்னும் புதிராகவே இருந்து வருகிறது. வருகிற ஜூன் மாதம் 22ம் தேதி விஜயின் பிறந்த நாள் வருகிறது. அந்த நாளில் ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்படலாம் என்று ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் அதை படத்தின் தயாரிப்பு நிறுவனமோ இயக்குனரோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

- Advertisement -

இதற்கிடையே நேற்று தவெக கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்தன. அதைத் தொடர்ந்து இரவு 7 மணியளவில் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் வி அர்லேகரை கவர்னர் மாளிகையில் நேரில் சென்று சந்திதார். அப்போது புஸ்லி ஆனந்த் செங்கோட்டையன் ஆதவ் அர்ஜூனா அருண்ராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.

அப்போது கருப்பு நிற ஓவர்கோட் அணிந்த தாடி வைத்த ஒருவரும் விஜயுடன் இருந்தார். பின்புதான் அவர் ஜனநாயகன் படத்தின் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் என்று தெரிய வந்தது. நேற்று மாலை நடிகர் விஜயை சந்திக்க தயாரிப்பாளர் சென்ற நிலையில், கவர்னரை சந்திக்க புறப்பட்ட விஜய், அவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். மற்றபடி படம் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்