- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனை ஓவரா புகழ்றாங்க- எரிமலையாய் கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர், இவ்வளவு கடுப்பா?

சிவகார்த்திகேயனை ஓவரா புகழ்றாங்க- எரிமலையாய் கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர், இவ்வளவு கடுப்பா?

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய், அஜித் ஆகியோரின் திரைப்படங்களுக்கு எந்தளவுக்கு ஓப்பனிங் இருக்குமோ அந்தளவுக்கு சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கும் ஓபனிங் இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பேமிலி ஆடியன்ஸ்கள் பலரையும் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இவ்வாறு ரசிகர்கள் பலரின் உள்ளம் கவர்ந்த நடிகராக சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள “மாவீரன்” திரைப்படம் வருகிற 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதே போல் சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்படம் பல இழுபறிகளுக்கு பிறகு வருகிற தீபாவளி என்று வெளியாகிறது. தற்போது சிவகார்த்திகேயன் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளர் BOFTA தனஞ்சயன், டாப் 3 நடிகர்கள் குறித்து பேசியபோது, “விஜய், அஜித் சூர்யா ஆகியோர்தான் டாப் 3 இடத்தில் தற்போது இருக்கிறார்கள். இதில் சூர்யா நம்பர் 3-ல் இருக்கிறார். சிலர் சிவகார்த்திகேயன் நம்பர் 3-க்கு வந்துவிட்டார் என கூறுகிறார்கள். இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.

எனக்கு அதில் மிகவும் வருத்தமாக இருக்கும். இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவது மிகவும் தவறு. நான் சிவகார்த்திகேயனை குறைத்து மதிப்பிடவில்லை. சிவகார்த்திகேயனை நம்பர் 4 என்று சொல்லுங்கள். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நம்பர் 4-ல் தனுஷ் ஒரு கடுமையான போட்டியாளராக இருக்கிறார். வேண்டுமென்றே சிவகார்த்திகேயனை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று செய்கிறார்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனாலும் தமிழ் சினிமாவில் டாப் 3 என்றால் அது விஜய், அஜித், சூர்யா மட்டுமேதான்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்