- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் நடிகை ரவீனா தாண்டன் கூறியதாவது, விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் திரை பிரபலங்களை புகைப்படம் எடுப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சிலர் எங்களை பின்தொடர்ந்து வந்து துரத்துகிறார்கள். நாங்கள் எங்கு சென்றாலும் புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்கிறார்கள். இது ஒரு விதமான அசௌகரியத்தை ஏற்படுத்தி தொந்தரவாக உள்ளது. இத்தகைய செயல்களை நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். சினிமா பிரபலங்கள் என்பதை தாண்டி நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. எங்களது பிரைவசிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழில் சாது ஆளவந்தான் சமீபத்தில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உள்ளிட்ட படங்களில் ரவீணா தாண்டன் நடித்திருந்தார்.





