- Advertisement -
Homeபொழுதுபோக்குஅம்பானி வீட்டில் நடந்த தரமான சம்பவம்; குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள் - அட நயன்தாரா, விக்கி,...

அம்பானி வீட்டில் நடந்த தரமான சம்பவம்; குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள் – அட நயன்தாரா, விக்கி, அட்லீ கூட அதில் கலந்துகிட்டாங்களா?

- Advertisement -

உலக பணக்காரர்களின் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. மும்பையில் .உள்ள இவரது ஆன்டிலா வீட்டில் அரசியல் சார்ந்தவர்களும், பெரும் தொழிலதிபர்களும், விளையாட்டுத்துறை சார்ந்தவர்களும் குறிப்பாக, பாலிவுட் சினிமா துறை சார்ந்த நட்சத்திரங்களும் குவிந்து விட்டனர். இதில் தமிழ் சினிமா உலகை சேர்ந்த நயன்தார – விக்னேஷ் சிவன், அட்லீ – பிரியா, ராஷ்மிகா மந்தானா போன்றவர்களும் காணப்பட்டனர்.

அப்படி என்னதான் தரமான சம்பவம் என்றால், விநாயகர் சதுர்த்தி விழாவை, அம்பானி வீட்டில் கொண்டாடி இருக்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்க, சிறப்பு அழைப்பாளர்களாக பலரும் அழைக்கப்பட்டு, பல துறை சார்ந்தவர்களும் இந்நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஸ்ரத்தா கபூர்,சல்மான் கான், ஆலியாபட், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக், கியாரா அத்வானி, சித்தார் மல்கோத்தரா, ஜான் ஆபிரகாம், சுனில் ஷெட்டி, ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர் என, பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துக்கொண்டனர். இதில் தம்பதியாக பலரும் பங்கேற்றனர். தங்களது குழந்தைகளுடன் சில நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.

படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே சந்தித்துக்கொண்ட நடிகர், நடிகையர் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, மனம் விட்டு பேசி சிரித்து, தங்களது கடந்தகால அனுபவங்களை, சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துக்கொண்டனர். பலரும், ஜோடியாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்த நயன்தாரா, அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்தில், ஷாருக்கான் ஜோடியாக நடித்தார். இதையடுத்து, பாலிவுட் நாயகியாக மாறி இருக்கும் நயன்தாரா, தனது கணவருடன் அம்பானி வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது. இதில் அட்லீ – பிரியா தம்பதியும் மகிழ்ச்சியாக கலந்துகொண்ட புகைப்படங்களும் பரவி வருகின்றன.

பாலிவுட் சினிமா நட்சத்திரங்களை பொருத்த வரை, இதுபோன்ற விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுவர். முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, செம ‘லுக்’கான ஆடைகளில், கலக்கலாக வந்து கலந்துகொண்ட அவர்களது புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்