- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 வாரங்களில் கருப்பு படத்தின் வசூல் இத்தனை கோடிகளா? முதல்முறையாக சம்பவக்காரனாக மாறிய நடிகர் சூர்யா...

4 வாரங்களில் கருப்பு படத்தின் வசூல் இத்தனை கோடிகளா? முதல்முறையாக சம்பவக்காரனாக மாறிய நடிகர் சூர்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா ஆரம்பத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தார். ஆனால் கடந்த 2013ம் ஆண்டில் ஜூலை 5ம் தேதி வெளியான சிங்கம் 2 படத்துக்கு பிறகு பெரிய வெற்றிப் படம் அவருக்கு அமையவில்லை. இந்த படம் மட்டுமே ரூ. 160 கோடி வசூலித்த சூர்யாவின் அதிகபட்ச வசூல் படமாகவும் இருந்தது.

இடைப்பட்ட இந்த 13 ஆண்டுகளில் நடிகர் சூர்யா நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் பலத்த தோல்வி படங்களாக இருந்தன. குறிப்பாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் காப்பான் கங்குவா என்ஜிகே மாசு என்கிற மாசிலாமணி எதற்கும் துணிந்தவன் 24 சிங்கம் 3 தானா சேர்ந்த கூட்டம் என எந்த படமுமே சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை.

- Advertisement -

அதே நேரத்தில் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே வணிகரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன. ஒருவேளை இந்த படங்கள் நேரடியாக தியேட்டர்களுக்கு வந்திருந்தால் அது பிளாக்பஸ்டர் வெற்றியை சூர்யாவுக்கு தந்திருக்கும். அதுவும் நடக்கவில்லை.

கடந்தாண்டில் வெளியான கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரெட்ரோ படமும் வணிக ரீதியாக நடிகர் சூர்யாவுக்கு வெற்றியை தந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் சூர்யாவுக்கு ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி தேவை என்ற நெருக்கடியில் திரைக்கு வந்து அந்த சாதனை செய்த படம் தான் கருப்பு.

- Advertisement -

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா கருப்பசாமி கேரக்டரில் நடித்த படம்தான் கருப்பு. கடந்த 15ம் தேதி வெளியான இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆந்திரா கேரளா கர்நாடகா என பிற மாநிலங்களிலும் கருப்பு படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஓவர்சீஸ்சிலும் கருப்பு படம் வசூலை குவித்துள்ளது.

கடந்த மே மாதம் 15ம் தேதி கருப்பு படம் வெளியான நிலையில் 28 நாட்களில் அதாவது 4 வாரங்களில் இந்த படம் மொத்தம் 340 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதன் முறையாக ரூ. 340 கோடி வசூலை தந்து கருப்பு படம் மூலம் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்த சந்தோஷத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்