- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173 படம் குறித்து வெளியான முக்கிய தகவல், அப்போ நடிகர் சூர்யாவுக்கு பிரச்னை இல்லே...

தலைவர் 173 படம் குறித்து வெளியான முக்கிய தகவல், அப்போ நடிகர் சூர்யாவுக்கு பிரச்னை இல்லே – சந்தோஷப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய நிலையில் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த 2ம் பாகம் 1000 கோடி ரூபாய் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. அவர் விலகிய நிலையில் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் இந்த படத்தை இயக்குகிறார் என்று உறுதியாகி உள்ளது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார். இதற்கு முன்பு நான் சிவப்பு மனிதன் படத்தில் கிளைமாக்ஸில் வில்லன் சத்யராஜை கொல்வதற்காக டாக்டர் போல வேடமணிந்து ரஜினி வருவார். அதன்பிறகு சந்திரமுகி படத்தில் டாக்டர் என்றாலும் அதில் சைக்கோ டாக்டராக இருப்பார்.

ஆனால் இந்த படத்தில் தான் எம்பிபிஎஸ் படித்த ஒரு டாக்டர் கேரக்டரில் கழுத்தில் ஸ்டெத்தாஸ்கோப்புடன் ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது ஆக்சன் கேங்ஸ்டர் படமல்ல. குடும்ப கதை பின்னணியில் உருவாகும் ஒரு பொழுதுபோக்கு படம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 5 ரூபாய் டாக்டர் கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியானது. சென்னையில் 5 ரூபாய் மட்டுமே மருத்துவ கட்டணமாக வாங்கி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்த டாக்டர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் திருவேங்கடம் பாணியில் இந்த படத்தில் ரஜினி கேரக்டர் இருக்கும் என்று சொல்லப்பட்டது. இது சூர்யா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஏனெனில் நடிகர் சூர்யா அடுத்து நடிக்க உள்ள ஒரு புதிய படத்தில் இந்த 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் வாழ்க்கை கதையில்தான் நடிக்க உள்ளார். அதனால் இந்த படத்தில் சூர்யாவுக்கு போட்டியாக ரஜினி வந்துவிட்டாரே என்ற சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இந்த படத்தில் ரஜினி சாதாரண டாக்டர்தான். 5 ரூபாய் டாக்டர் இல்லை என்பது உறுதியாகி உள்ளதால் சூர்யா ரசிகர்கள் ரிலாக்ஸ் ஆகியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்