தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் ரோகிணி. மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். கடந்த 1976ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்க துவங்கினார். நடிகையாக மட்டுமின்றி ஜோதிகா தபூ ஐஸ்வர்யா ராய் ரஞ்சிதா ஊர்மிளா உள்ளிட்ட பல கதாநாயகிகளுக்கு ரோகிணி பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
நடிகை ரோகிணி பவுனு பவுனுதான் தந்துவிட்டேன் என்னை ரெண்டு பொண்டாட்டி காவல்காரன் மகளிர் மட்டும் ஆசை விருமாண்டி மறுபடியும் பாகுபலி ஐயா என பல படங்களில் நடித்திருக்கிறார். முதலில் நாயகியாக நடித்த அவர் சமீபகாலமாக அம்மா அக்கா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
கடந்த 1996ம் ஆண்டில் நடிகர் ரகுவரனை ரோகிணி திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ரிஷிவரன் என்கிற ஒரு மகன் உள்ளார். ஆனால் 2004ம் ஆண்டில் ரகுவரனை விட்டுப் பிரிந்த ரோகிணி சட்டப்படி விவாகரத்தும் பெற்று விட்டார். கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களில் தொடர்ந்து ரோகிணி பங்கேற்று பேசி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோகிணி கூறியதாவது, ரகுவரன் எனது சினிமா வாழ்க்கைக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்கவில்லை. நான் வேலைக்கு செல்வதை அவர் சுத்தமாக விரும்பவில்லை. நான் ஒரு குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். அதனால் தான் திருமணத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் நான் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தேன்.
ரகுவரன் வளர்ந்த குடும்பச் சூழல் அப்படிப்பட்டது. அங்கு பெண்கள் யாரும் வேலைக்கு செல்லும் வழக்கம் இல்லை. தன் மனைவி எப்போதும் தன் பாதுகாப்புக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. இதிலிருந்து நான் வெளியே வர எனக்கு நீண்ட காலம் பிடித்தது. பல போராட்டங்களுக்கு பிறகுதான் நான் மீண்டும் சினிமாவுக்கு வந்து ஒரு படத்தை இயக்கவும் செய்தேன்.
நான் ரகுவரனுடன் வாழ்ந்தது 7 ஆண்டுகள் தான். ஆனால் சினிமாவில் பொதுவாழ்வில் அதைவிட அதிகமான ஆண்டுகள் நான் இருந்திருக்கிறேன். ஆனால் என்னை ரகுவரன் மனைவியாகவே மட்டுமே அடையாளப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று நடிகை ரோகிணி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





