- Advertisement -
Homeபொழுதுபோக்குடெய்லி பேட்டாவுக்காக பரத் செய்த தந்திரம், ஆரம்பக்கட்டத்துல இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காரா?

டெய்லி பேட்டாவுக்காக பரத் செய்த தந்திரம், ஆரம்பக்கட்டத்துல இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காரா?

- Advertisement -

ஷங்கரின் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பரத், அதனை தொடர்ந்து, “செல்லமே”, “காதல்”, “எம் மகன்”, “வெயில்” போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு பரத்தின் திரைப்படங்கள் சரியாக போகவில்லை. ஆதலால் அவரது கெரியரில் மிகப் பெரிய சறுக்கல் விழுந்தது. “பாய்ஸ்’ திரைப்படத்தில் அறிமுகமான சித்தார்த்தும், தமனும் இப்போது வேற லெவலில் இருக்கிறார்கள்.

ஆனால் அதே “பாய்ஸ்” திரைப்படத்தில் அறிமுகமான பரத், மணிகண்டன், நகுல் ஆகியோரின் கெரியர் சற்று கவலைக்குறியதாகவே அமைந்தது. இதில் பரத், நகுல் ஆகியோர் பின்னாளில் வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் மணிகண்டன் ஒன்றோ அல்லது இரண்டோ திரைப்படங்களில் காணாமலே போனார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் பரத், “பாய்ஸ்” திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது தான் பட்ட கஷ்டங்களை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “பாய்ஸ்” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது பரத் சென்னை சூலைமேடு பகுதியில் தங்கியிருந்தாராம். மணிகண்டன் தனது பைக்கில் பரத்தை பிக்கப் செய்து இருவரும் சேர்ந்துதான் ஷங்கரின் அலுவலகத்திற்கு செல்வார்களாம். அந்த சமயத்தில் ஒரு நாளைக்கு பெட்ரோல் பேட்டா 100 ரூபாய் கிடைக்குமாம். அதனை இருவரும் பங்கு போட்டுக்கொள்வார்களாம்.

ஆனால் படப்பிடிப்பு நாட்களில் இவர்களை அழைத்துப்போக கார் வந்துவிடுமாம். ஆதலால் இவர்களின் தினசரி பேட்டாவிற்கு பங்கம் நேர்ந்துகொண்டிருந்ததாம். இதனால் மணிகண்டனும் பரத்தும் ஒரு திட்டம் தீட்டினார்களாம். நேராக மேனேஜரிடம் சென்று, “நாங்கள் இருவர் மட்டும் இனி பைக்கில் வருகிறோம். எங்களுக்கு பெட்ரோல் பேட்டா கொடுத்துவிடுங்கள்” என கூறினார்களாம். உடனே மேனேஜர், சரி என்று தினமும் 1000 ரூபாய் பேட்டா தர தொடங்கினார்களாம். அதனை இருவரும் பிரித்துக்கொள்வார்களாம். இவ்வாறு மணிகண்டனிடம் இருந்த நட்பை குறித்து பரத் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்