- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிக்கூண்டுல இருக்கிற கடிகாரத்தை முதல்வர் விஜய் வந்துதான் பேட்டரி போட்டு சரி செய்யணுமா? - ஆவேசமாக...

மணிக்கூண்டுல இருக்கிற கடிகாரத்தை முதல்வர் விஜய் வந்துதான் பேட்டரி போட்டு சரி செய்யணுமா? – ஆவேசமாக கேள்வி எழுப்பிய காமெடி நடிகர் கூல் சுரேஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் கூல் சுரேஷ். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். நடிகர் மன்சூர் அலிகான் சரக்கு படம் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்ணுக்கு மேடையில் பூ மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கியவர். அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள கொங்கணாபுரம் என்ற ஊருக்கு நடிகர் கூல் சுரேஷ் தனது காரில் சென்றிருக்கிறார். அப்போது அங்கு பிரதான ரோட்டின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூண்டில் கடிகாரம் 3 மணி 30 நிமிடம் என நேரம் காட்டுகிறது.

- Advertisement -

ஆனால் இப்போது 10 மணி 8 நிமிடம்தான் ஆகிறது என்று கூறிய நடிகர் கூல் சுரேஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூல் சுரேஷ் கூறியிருப்பதாவது, கொங்கணாபுரம் என்ற ஊருக்கு விசாரணைக்கைதி என்ற படத்தில் நடிக்க ஷூட்டிங்குக்கு வந்திருக்கிறேன்.

வந்த இடத்துல ஒரு சம்பவம். கொங்கணாபுரம் ரவுண்டானாவில் ஒரு மணிக்கூண்டு இருக்கிறது. அந்த கடிகாரத்தில் இப்போது 3;30 மணி என்று காட்டுகிறது. ஆனால் இப்போது மணி 10:08 தான் ஆகிறது. அந்த வாட்ச் ஓட மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் வந்துதான் பேட்டரி போடணுமா?

- Advertisement -

அவர் வந்து பேட்டரி போட்டா தான் அந்த வாட்ச்சை நீங்க ஓட வைப்பீங்களா எப்படி? எல்லாத்துக்குமே விஜய் சார் வரணுமா? அது ஏதோ விளம்பரதாரர் தான் அந்த வாட்சை அங்க வைச்சிருக்காங்க. சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் அந்த கடிகாரத்தை ஒழுங்காக ஓட வைக்க பொறுப்பாக நடவடிக்கை எடுக்கணுமா? இல்லையா?

வௌிநாட்டுக்காரங்க இங்க சேலத்துக்கு கொங்கணாபுரத்துக்கு வந்தாங்க என்றால் இந்த வாட்ச்சை பார்த்தால் நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க? எல்லாத்துக்குமே விஜய் சார் தான் வரணும். பேட்டரியை போட்டு சுத்தி விடணும் என்று இல்லை. நம்ம தான் நாட்டு மேல நாட்டு மக்கள் மேல பொறுப்பாக இருக்கணும். அது ரொம்ப முக்கியம் என்று அந்த வீடியோவில் கூல் சுரேஷ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்