- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் நடிகர் சிம்புவுக்கு அப்படி ஒரு விழா எடுக்கப் போறாங்களாம், களத்தில் விறுவிறுப்பாக இறங்கிய டிஆர்...

விரைவில் நடிகர் சிம்புவுக்கு அப்படி ஒரு விழா எடுக்கப் போறாங்களாம், களத்தில் விறுவிறுப்பாக இறங்கிய டிஆர் – பட்டைய கௌப்ப போறாங்கன்னு சொல்லுங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன். 41 வயது கடந்த நிலையில் சிம்பு படங்களில் நடித்து வருகிறார். நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன். மேலும் இளைய மகன் குறளரசன், 3வது மகள் இலக்கியா மூவரும் டி ஆரின் வாரிசுகள். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.

சிலம்பரசன் தனது தந்தை டி ராஜேந்தரை போலவே சினிமாத் துறையில் ஒரு நடிகராக, இயக்குனராக சகலகலை கற்ற ஒரு வல்லவராக திகழ்ந்து வருகிறார். சிலம்பரசன் 1 வயது குழந்தையாக இருக்கும்போதே குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்கிய படத்தில் அறிமுகமானவர்.

- Advertisement -

கடந்த 1984ம் ஆண்டில் வெளியான உறவை காத்த கிளி என்ற படத்தில் ஒரு வயது குழந்தையாக சிம்பு நடித்திருப்பார். தொடர்ந்து டி ராஜேந்தர் இயக்கி 1980, 90 வெளிவந்த பல படங்களில் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக, சிறுவனாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, சபாஷ் பாபு, ஒரு வசந்த கீதம், தாய் தங்கை பாசம் உள்ளிட்ட பல படங்களில் குழந்தையாக, சிறுவனாக சிம்பு நடித்திருக்கிறார். பப்ளிமாஷ் தோற்றத்தில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் அவரது மழலை நடிப்பை வெகுவாக ரசித்து, லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைத்தனர்.

- Advertisement -

அதன்பிறகு காதல் அழிவதில்லை படத்தில் பாடல் காட்சி மூலம் வாலிபராக அவர் அறிமுகமானார் தொடர்ந்து மன்மதன், தம், குத்து, வல்லவன், கோவில், ஒஸ்தி, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து சிம்பு வலம் வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு மிகப்பெரிய வெற்றிப்படமாக சிலம்பரசனுக்கு அமைந்தது. தொடர்ந்து இப்போது கமல்ஹாசனுடன் தக்லைப் படத்தில் நடித்திருக்கிறார்.

இதற்கிடையே தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் சிலம்பரசனுக்கு, சிம்பு 40 என்ற சிறப்பு விழா நடத்த அவரது ரசிகர்களும், அபிமானிகளும் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் சிம்புவின் தந்தை டிராஜேந்தர் பரபரப்பாக இறங்கி இருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும். அதே நேரத்தில் 41 வயது கடந்த சிம்புவுக்கு திருமண ஏற்பாடுகளையும் ஜரூராக செய்தால் நன்றாக இருக்குமே என்று சிம்புவின் ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்