- Advertisement -
Homeபொழுதுபோக்குபாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படத்தில் திடீர் திருப்பம், முக்கிய முடிவெடுத்த பிரபலம் -...

பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படத்தில் திடீர் திருப்பம், முக்கிய முடிவெடுத்த பிரபலம் – அட இதிலேயும் அந்த விஷயத்தை கொண்டு வந்துட்டாங்களா?

- Advertisement -

தமிழக அரசியல் வரலாற்றில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஐயாவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. பல தேர்தல்களில் அவரது கட்சி பாமக, திமுக அல்லது அதிமுக என இரண்டில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுவிடும். ஆனால் இந்த முறை அதிமுக, திமுக தவிர்த்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து, நாடாளுமன்ற தேர்தலில் பாமக தோல்வியை தழுவியது.

எனினும் தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பாமக முக்கிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இருவரும் கட்சியை பெரிய அளவில் கொண்டு வந்துள்ளனர், இப்போதும் பாமகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் மகாத்மா காந்தியடிகள், நரேந்திமோடி, ராஜீவ்காந்தி, அன்னை இந்திராகாந்தி, தந்தை பெரியார், எம்ஜிஆர், கருணாநிதி, பாரதியார் என அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் எடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. விரைவில் தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக விளங்கும் இளையராஜா வாழ்க்கை வரலாறு படமும் 2 பாகங்களாக உருவாகிறது.

இத்தகைய வாழ்க்கை வரலாறு படங்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறுவதில்லை என்றாலும், அந்த தலைவர்கள் குறித்த ஒரு முக்கிய ஆவணமாக அந்த படங்கள் காலத்துக்கும் அவர்களது பெயர் சொல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஐயா வாழ்க்கை வரலாறு படமும் உருவாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில், இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கவும் சேரன் இயக்கவும், சரத்குமார், ராமதாஸ் கேரக்டரில் நடிக்கவும் முடிவு செய்யப்பட்டுங இருந்தது. ஆனால் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தீவிரம் காட்டாத நிலையில், இந்த படம் கிடப்பில் போடப்பட்டதாக துவக்கத்தில் கூறப்பட்டது.

ஆனால் இப்போது புதிய தகவலாக, லைகா புரடக்சன்ஸ் இந்த படத்தை நிராகரித்தாலும், அந்த நிறுவனத்தின் தமிழ்நாடு பொறுப்பில் உள்ள தமிழ்குமரன் இந்த படத்தை அவரே தயாரிக்க முன்வந்துள்ளது. ஏனெனில் அவர் பாமகவினர் தீவிர அபிமானி என்று கூறப்படுகிறது. அதனால் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படம் சேரன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் உருவாகிறது. முதல்கட்டமாக திருத்தணியில் ஷூட்டில் நடத்தப்படுகிறது. மேலும் இந்த படமும் 2 பாகங்களாக உருவாகிறது. முதல் பாகத்தில் சைக்கிளில் சென்று, பிரசாரம் செய்து பின், அவர் கட்சியில் பெரிய தலைவராக உருவாகும் வரை, அதற்கு பின் 2ம் பாகத்தில் அவரது அரசியல் வாழ்க்கை பயணம் குறித்த படமாகவும் இது 2 பாகங்களாக தயாரிக்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்