நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லும் நடிகர் விஜய் அடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக முழுவீச்சில் அரசியலில் ஈடுபட உள்ளார். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தனது கட்சியை தயார்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த சூழலில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஷூட்டிங் வருகிற மே 15ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் துவங்கப்படுகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யப் போவது வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படமும் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி மாதம் பொங்கலுக்குதான் ரிலீஸாக உள்ளது. அதனால் விஜய் படமும் சிவகார்த்திகேயன் படமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலையில் விஜய்க்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஜனநாயகன் பராசக்தி படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனாலும் விஜய்க்கு போட்டியாக சிவகார்த்திகேயனை சொல்ல முடியாது. ஏனென்றால் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் 10 மடங்கு ஜாஸ்தியாக உள்ளது. அந்தளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் கூட்டம் இல்லை. விஜய்க்கு எதிராக அஜீத் நடித்த படம் வந்தால்தான், அது போட்டியாக இருக்கும்.
அதுமட்டுமின்றி இது விஜய் நடிக்கும் கடைசி படம். அந்த சென்டிமென்ட் காரணமாகவே ஜனநாயகன் படத்தை காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்துவிடும். இந்த படத்தில் விஜய்க்கு சென்ட் ஆப் பேரவல் தருவது போல ஒரு பாடல் காட்சியில் அட்லி நெல்சன் லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களே பங்கேற்பது போன்று உள்ளது.
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஜனநாயகன் படத்துக்கு பராசக்தி போட்டியாக இருக்க வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் பராசக்தி படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும். ஏனென்றால் சுதா கொங்கரா நல்ல பெரிய இயக்குனர். சிவகார்த்திகேயனும் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர். அதே நேரத்தில் ஜனநாயகன் படத்துக்கு பராசக்தி படம் போட்டியாக இருக்க வாய்ப்பே இல்லை என்று அந்தணன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





