இந்திய நாட்டை தொடர்ந்து பாஜக தலைமையிலான மோடி அரசு ஆட்சி செய்து வருகிறது. கடந்தாண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போதிய அளவில் மெஜாரிட்டி பெறாத நிலையிலும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆதரவால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தொடர்ந்து வருகிறது. எனினும் பாஜகவுக்கு தமிழகத்தில் பின்னடைவே நீடிக்கிறது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பல தொகுதிகளை கைபற்றி வரும் பாஜக தேசிய கட்சிக்கு தமிழ்நாட்டில் மட்டும் தொடர்ந்து தோல்வியே ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் பரிசாக கிடைத்து வருகிறது. 2019ம் ஆண்டில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் 39 தொகுதிகளிலும், 2024ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
தமிழ்நாட்டை ஆட்சி செய்துவரும் திமுக மீது கடும் அதிருப்தி இருந்த போதிலும் நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து அவர்களுக்கு ஓட்டுப் போட காரணம், பாஜக மீதுள்ள அதிகப்படியான வெறுப்புதான். அதுதான் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைகிறது. மற்றபடி திமுக மீதான அபிமானம் இந்த வெற்றிக்கு காரணமல்ல என்பதே நிதர்சமான உண்மை.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமாருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்தது. கலைத்துறையில் விளையாட்டுத் துறையில் மக்கள் சேவையில் எதுவுமே பெரிய அளவில் சாதிக்காத, ஆர்வம் காட்டாத நடிகர் அஜீத்குமாருக்கு எதற்கு பத்ம பூஷன் விருது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எந்த தகுதி அடிப்படையில் அஜீத்குமாருக்கு பத்மபூஷன் விருது என்றும் விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்க தலைவராக உள்ள அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வர உள்ளது. இதுவும் பலவித விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
வருகிற சட்டசபை தேர்தலில் பாஜக கட்சிக்கு அஜீத்குமார் ரசிகர்களின் ஆதரவு தேவை என்ற நோக்கத்தில் அஜீத்குமாருக்கு பத்மபூஷன் விருதை அறிவித்த மத்திய அரசு, நடிகர் விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு உத்தரவிட்டுள்ளது. மற்றபடி அஜீத்குமார் விஜய் ரசிகர்களின் ஓட்டுகளை, ஆதரவை பெறவே இதுபோன்று விஜய், அஜீத்குமார் என்ற 2 திரை நட்சத்திரங்கள் மீது மத்திய அரசு அதிக கவனம் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.





