இயக்குநர் அட்லீ நடிகை பிரியாமணி- தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத அழகான, அதே வேளையில் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் நடிகை. அமீர் இயக்கத்தில், ‘பருத்திவீரன்’ படத்தில் ‘முத்தழகு’ கேரக்டரில் நடித்ததற்காக, தேசிய விருது பெற்றவர். பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான பிரியாமணி, சொற்ப படங்களில் நடித்திருந்தாலும், பல படங்களில் தன் நடிப்பாற்றலை நிரூபித்துக் காட்டியவர்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன, ஜவான் படத்தில் பிரியாமணி, ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் – நயன்தாரா நடித்த பான் இந்தியா படமான இந்த படத்தில் நடித்தது குறித்து, பிரியாமணி சமீபத்தில் வெளிப்படையாக பேசினார். அதில், இயக்குநர் அட்லீ தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘ஜவான்’ படத்தில் நடிப்பதற்காக பிரியாமணியிடம் பேசிய போது, இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் விஜய் நடிப்பதாக அட்லி கூறி இருக்கிறார். ‘அப்படி என்றால், விஜய் நடிக்கும் காட்சிகளில் நானும் அவருடன் நடிப்பது போன்ற காட்சிகளை அமைத்து விடுங்கள் என்று, பிரியாமணி கூறி இருக்கிறார். அதற்கு, அட்லீயும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால், ‘ஜவான்’ படத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதும், தன்னிடம் சொல்லப்பட்டது பொய் என்பதும் படப்பிடிப்புக்கு சென்ற பின்புதான், பிரியாமணிக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது.
அதாவது, நடிகர் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், ‘ஜவான்’ படத்தில் பிரியாமணி நடிக்க சம்மதித்த நிலையில், அவரது அந்த விருப்பம் நிறைவேறவில்லை. அதனால்தான், இயக்குநர் அட்லீ, தன்னை ஏமாற்றி விட்டதாக பிரியாமணி வெளிப்படையாக கூறி, ரசிகர்களிடம் தன் வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இயக்குநர் அட்லீக்கு, பிற படங்களை காப்பியடிப்பதில் மன்னன் என்ற பட்டப் பெயர் ரசிகர்களிடம் உள்ளது. ‘ஜவான்’ படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், 23 படங்களில் இருந்து, பல காட்சிகளை எடுத்துதான், ‘ஜவான்’ படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என, கூறி இருந்தனர். ஒரு படத்துக்காக வாங்கிய டிக்கெட்டில், 23 படங்களை காட்டிய பெருமை, இயக்குநர் அட்லீயை மட்டுமே சேரும் எனவும் கிண்டலடித்து இருநு்தனர்.
இப்போது, விஜய் நடிப்பதாக கூறி பிரியாமணியை ஏமாற்றி அட்லீ, ஜவான் படத்தில் நடிக்க வைத்திருப்பதும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.





