- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்திரமுகி-2 படத்தின் முதல் விமர்சனம். திகில் கிளப்பும் கீரவாணி

சந்திரமுகி-2 படத்தின் முதல் விமர்சனம். திகில் கிளப்பும் கீரவாணி

- Advertisement -

கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பி. வாசு இயக்கத்தில் வித்தியாசாகர் இசையில் வெளியான படம் தான் சந்திரமுகி. இந்த படத்தில் நயன்தாரா, வடிவேலு, ஜோதிகா, நாசர், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். படமும் மிகப்பெரிய ஒரு வசூல் சாதனையை படைத்தது.

சந்திரமுகி வெளியான அதே சமயத்தில் தான் விஜய் நடித்த சச்சின் படமும் வெளியானது. ஆனால் அந்த படம் அந்த சமயத்தில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகியில் ஒரு பாடலில் லகலக என்று ரஜினி பேசிய வசனங்கள் இன்று வரை குழந்தைகளிடம் பிரபலம் என்றே கூறலாம்.

மனநல மருத்துவராக நடித்திருந்த ரஜினி சந்திரமுகி என்னும் பேயை எப்படி கண்டுபிடித்து எப்படி அந்த வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார் என்ற கோணத்தில் தான் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி வாசு எடுக்க தயாரானார்.

ஆனால் இந்த முறை ரஜினி நடிக்கவில்லை. மாறாக இதில் ராகவாலாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி ஒன்றாம் பாகத்தில் இருந்த சிலர் இதில் இடம் பெறுகிறார்கள். குறிப்பாக வடிவேலு இதில் நடித்துள்ளார். சந்திரமுகி-2 படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். சமீபத்தில் அவர் ஆஸ்கார் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கான புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கூடிய விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சந்திரமுகியின் இசையமைப்பாளரான கீரவாணி தனது சமூக வலைதள பக்கத்தில் தான் சந்திரமுகி படத்தை முழுமையாக பார்த்து விட்டதாக பதிவு செய்துள்ளார்.

அது மட்டும் அல்லாது அந்த படத்தில் நடித்த பலரும் மரண பயம் காரணமாக பல நாட்கள் தூங்காமல் இருந்திருப்பார்கள் என்ற ஒரு கருத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சந்திரமுகி திரைப்படம் உண்மையில் திகில் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

சற்று முன்