- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை மதிக்காத அந்த 2 நடிகர்கள், அந்த படம் மிகப்பெரிய பிளாப் ஆக அவர்தான் காரணம்...

என்னை மதிக்காத அந்த 2 நடிகர்கள், அந்த படம் மிகப்பெரிய பிளாப் ஆக அவர்தான் காரணம் – உண்மையை சொல்லி வருத்தப்பட்ட இயக்குநர் சேரன்

- Advertisement -

இயக்குநர் சேரன், தமிழ் சினிமாவில் மூத்த இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். சமுதாய அக்கறையுள்ள படங்களை இயக்கி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு, தேசிய கீதம், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி போன்ற பல நல்ல படங்களை தந்தவர். இந்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிப்படங்களாகவும் இருந்தன.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, சேரன் இயக்கிய சில படங்களில் அவரே நடித்தார். அந்த கதையில், கேரக்டரில் அவர் பொருந்தாத நிலையில் சில படங்கள் அவருக்கு தோல்வியை தந்தது. அதே நேரத்தில் தங்கர்பச்சான் இயக்கத்தில் சேரன் நடித்த சொல்ல மறந்த கதை, கரு பழனியப்பன் இயக்கத்தில் நடித்த பிரிவோம் சந்திப்போம் படங்கள் வெற்றி பெற்றன.

- Advertisement -

சேரன் இயக்கிய நடித்த படங்களில் மிக மோசமான தோல்வியை தழுவிய படம் என்றால், அது மாயக்கண்ணாடிதான். அதாவது, சலூன் கடையில் வேலை பார்க்கும் ஒரு பார்பர், சினிமா நாயகனாக வேண்டும் என்று ஆசைப்படுவதுதான் கதை. இந்த படத்தின் மையக்கரு நன்றாக இருந்தும், அந்த கேரக்டரில் சேரன் நடித்ததால் படம் எடுபடவில்லை. அதனால் பிளாப் ஆனதாக அப்போதே பலரும் விமர்சித்தனர்.

இதுகுறித்து இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, மாயக்கண்ணாடி படத்தில், என்னைத் தவிர வேறு எந்த ஹீரோ நடித்திருந்தாலும் அந்த படம் நன்றாக ஓடியிருக்கும். அந்த கேரக்டரில் சிம்பு, அல்லது தனுஷ் நடித்திருந்தால் பெரிய அளவில் ஓடியிருக்கும். நான் நடித்ததால்தான் அந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது.

- Advertisement -

நான் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாமே, அது எனக்காக எழுதப்பட்ட கதைகள் அல்ல. பல பெரிய நடிகர்களிடம் அந்த படங்களில் நடிக்க கேட்டு, அவர்கள் யாருமே சம்மதிக்காத நிலையில், கடைசியில் அந்த படங்களில் நானே நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படிதான் அந்த படங்களில் நான் நடித்து நடிகர் ஆனேன்.

இப்போதும் என்னுடைய கதைக்கு பெரிய ஹீரோ ஒருவரிடம் கால்ஷீட் கேட்டு பேசி வருகிறேன். இந்த கதையில் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும். பலமுறை போனில் கேட்டுப் பார்த்தேன். ஆனால் இதுவரை அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. ஒருவேளை அவர்களிடம் கால்ஷீட் இல்லையா என்று தெரியவில்லை. அதற்கு மேல் அவர்களுக்கு என் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லையா என்றும் தெரியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில், என் பயணத்தை முடித்து விட முடியாது. யாருமே வராத பட்சத்தில் நான்தான் நடிக்க வேண்டியது இருக்கும் என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார் இயக்குநர் சேரன்.

- Advertisement -

சற்று முன்