அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் தற்போது பாலிவுட்டின் ஸ்டார் தம்பதியாக வலம் வருகிறார்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் ஐஸ்வர்யா ராயும் சல்மான் கானும் ஒருவருக்கொருவர் காதலித்த செய்திகள் பாலிவுட்டில் மிகப் பிரபலமானவை. இப்போதும் சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய் காதல் குறித்த மீம்கள் பாலிவுட் பக்கங்களில் உலா வருவது உண்டு.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய் காதல் பிரேக்கப்பில் முடிந்ததற்கான காரணத்தை குறித்து பேசியுள்ளார்.
சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும் 1999 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்தார்களாம். அத்திரைப்படம் மாபெரும் ஹிட் ஆகியிருக்கிறது. மேலும் சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய் ஜோடி ரியல் ஜோடியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று பத்திரிக்கைகளில் எழுத தொடங்கிவிட்டார்களாம்.
அந்த சமயத்தில் சல்மான் கான், ஐஸ்வர்யா ராயின் கெரியருக்கு ஒரு பக்க பலமாக இருந்தாராம். இது பின்னாளில் காதலாக உருவாகிவிட்டதாம். சல்மான் கானுக்கு வேண்டப்படாதவர்கள் பலரும் ஐஸ்வர்யா ராயிடம் சல்மான் கானை மிகவும் கோபக்காரர், திமிர் பிடித்தவர் என்றெல்லாம் கூறி அவரது மனதை மாற்ற முயற்சித்தார்களாம்.
ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கோ சல்மான் கான் மீது எந்த வித வெறுப்பும் ஏற்படவில்லையாம். மிகுந்த அன்பு வைத்திருந்தாராம். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு பல மொழிகளில் பல திரைப்படங்களில் வாய்ப்பு வந்ததாம். ஐஸ்வர்யா ராயின் சம்பளமும் அதிகரித்துவிட்டதாம்.
இந்த கட்டத்தில் சல்மான் கான் ஐஸ்வர்யா ராயிடம் “நாம் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் செய்துகொள்வதில் ஈடுபடு இருந்ததாம். ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கு நெருக்கமான பலரும் அவரிடம், “நீங்கள் இப்போது இந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருக்கிறீர்கள். இப்போது திருமணம் செய்துகொண்டால் உங்கள் கெரியரே முடிந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்கள்.
அதே போல் ஒரு படத்தில் ஐஸ்வர்யா ராய் தோழியின் தோழி கதாபாத்திரத்திற்கு ஆடிஷன் நடந்ததாம். அந்த சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே முந்நூறில் இருந்து நானூறு இளம் பெண்கள் அந்த ஆடிஷனுக்கு வந்திருந்தார்களாம். இதை பார்த்ததும், சினிமா உலகில் தனக்கு இவ்வளவு புகழ் இருப்பதை பார்த்து ஐஸ்வர்யா ராய் மிரண்டுப்போனாராம்.
அதன் பிறகுதான் சல்மான் கானை விட்டு பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்தாராம். சல்மான் கானோ பல முறை ஐஸ்வர்யா ராயிடம் பேச முயன்று தோற்றுப்போனாராம்.
ஒரு நாள் நடு இரவில் ஐஸ்வர்யா ராய் வீட்டின் கதவை தட்டியிருக்கிறார் சல்மான் கான். ஆனால் ஐஸ்வர்யா ராய் கதவை திறக்கவில்லையாம். இதனால் கடுப்பான சல்மான் கான் ஐஸ்வர்யா ராயின் வீட்டின் முன் ரகளையில் ஈடுபட்டாராம். அதன் பின் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானிடம், “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை” என திட்டவட்டமாக கூறி அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சல்மான் கான் இப்போதும் சிங்கிளாகவே வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





