- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது நெருக்கமான நண்பர்களை அரசு பதவிகளில் அமர வைக்கும் தமிழக முதல்வர் விஜய் - எச்சரிக்கும்...

தனது நெருக்கமான நண்பர்களை அரசு பதவிகளில் அமர வைக்கும் தமிழக முதல்வர் விஜய் – எச்சரிக்கும் அரசியல் விமர்சகர்கள்!

- Advertisement -

தமிழக முதல்வராக முன்னாள் நடிகர் விஜய் பதவி ஏற்ற பிறகு அவருக்கு நெருக்கமான நண்பர்களை தொடர்ந்து அரசு பதவிகளில் நியமனம் செய்வது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. மக்கள் வரிப் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டேன் தொடவும் விடமாட்டேன் தொட்டவர்களையும் விடமாட்டேன் என்று சினிமா டயலாக் பேசியவர் தமிழக முதல்வர் விஜய். ஆனால் இப்போது தனக்கு நெருக்கமான நண்பர்களை எல்லாம் அரசு பதவிகளில் அமர வைக்கிறார்.

அவர்களுக்கு அரசு பதவி அளித்து கௌரவப்படுத்துவது மட்டுமின்றி மாதந்தோறும் லட்சக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தில் இருந்து அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று அரசியல் கட்சிகளிடையே கேள்வி எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியவர் நடிகர் விஜய். பிறகு தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் அவர் வெற்றி பெற்றார்.

- Advertisement -

அதன் பிறகு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற பிறகு அவரது நெருங்கிய திரையுலக நண்பர்களுக்கு அரசு பதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். குறிப்பாக நடிகர் விஜயிடம் பல ஆண்டுகளாக மேனேஜராக பணிபுரிந்து வரும் ஜெகதீஷ் என்பவருக்கு முதல்வரின் தனிச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் படத்தை தயாரித்த கன்னட தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா என்பவருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விஜய் நடித்த பிகில் மற்றும் தி கோட் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு கோவில்களுக்கான அறங்காவலர் தேர்வு குழுவில் உறுப்பினராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த ஆண்டின் துவக்கத்தில் விஜயின் தவெக கட்சி 3ம் ஆண்டு விழாவில் பாட்டு பாடிய பாடகர் வேல்முருகன் கோயில்களுக்கான அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று தற்போது மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். மேலும் விஜயுடன் நீண்ட காலமாக உதவியாளராக இருந்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சபரிநாதன் எம்எல்ஏவாக தற்போது இருந்து வருகிறார்.

அவருக்கு அரசு தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. விஜயின் நெருக்கமான வட்டாரத்தில் உள்ள சிலருக்கு தொடர்ந்து இதுபோன்ற பதவிகளும் வழங்கப்பட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது. மிக விரைவில் தங்களுக்கும் ஏதாவது அரசு பதவி கிடைக்கும் என்று விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகுதியான நபர்களை விட்டுவிட்டு தனது நண்பர் என்கிற ஒரே தகுதிக்காக அரசு பதவிகளை முதல்வர் விஜய் நண்பர்களுக்கு வழங்குவது வருங்காலத்தில் பெரிய அவப்பெயரை விஜய்க்கு ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்