மலையாள பட நடிகை கீது மோகன்தாஸ் இயக்கிய படம் டாக்ஸிக். இந்த படத்தில் ஹீரோவாக யஷ் நடித்திருக்கிறார். அவரது சகோதரியாக நடிகை நயன்தாராவும் படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியும் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற 28ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் டாக்ஸிக் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் 2 தினங்களுக்கு முன்பு நடந்தது. அந்த விழாவில் நடிகை நயன்தாரா கலந்துக்கொண்டு பேசினார். வழக்கமாக இதுபோன்ற பிரமோசன் நிகழ்ச்சிகளுக்கு எட்டிப் பார்க்காத நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முதலில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளுமாறு டாக்ஸிக் படக்குழு தரப்பில் இருந்து மேனேஜர்தான் முதலில் அழைத்து நயன்தாரா தரப்பில் அவரது மேனேஜரிடம் பேசியிருக்கிறார். ஆனால் நயன்தாரா தரப்பில் கிடைத்த பதில் நோ என்பதுதான். அதன்பிறகு டாக்ஸிக் படத்தின் தயாரிப்பாளரே அழைத்து பேசியும் வருவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் பதில் கிடைத்துள்ளது.
அதன்பிறகு படத்தின் கதாநாயகன் யஷ் அழைத்து நயன்தாராவை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்திருக்கிறார். அப்போதுதான் பச்சை சிக்னல் விழுந்து நயன்தாராவும் ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் சல்மான்கானுடன் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
அதனால் டாக்ஸிக் பட விழாவுக்கு நான் வந்து விட்டால் அந்த படத்தின் படப்பிடிப்பு கேன்சல் ஆகிவிடுமே என்று யஷ்ஷிடம் நயன்தாரா வருத்தமாக கூறியிருக்கிறார். உடனே யஷ், நடிகர் சல்மான்கானை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது சல்மான் கான் சொன்னதுதான் பெரிய ஹைலைட்டாக இருந்துள்ளது.
படத்தின் பிரமோசனுக்கு கதாநாயகி வராவிட்டால் எப்படி? நிச்சயமாக நயன்தாராவை அந்த விழாவில் பங்கேற்க செய்யுங்கள். இங்கு படப்பிடிப்பு ஒரு நாள் கேன்சல் ஆனாலும் பரவாயில்லை. நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதன்பிறகுதான் டாக்ஸிக் பட விழாவில் நயன்தாரா மகிழ்ச்சியாக பங்கேற்று பேசியிருக்கிறார்.





