- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிம்புவுடன் இணையும் சூப்பர் ஸ்டார், அதுவும் இந்த டைரக்டர் படத்திலா? போடு வெடிய, தரமான...

நடிகர் சிம்புவுடன் இணையும் சூப்பர் ஸ்டார், அதுவும் இந்த டைரக்டர் படத்திலா? போடு வெடிய, தரமான சம்பவம் காத்திருக்குது!

- Advertisement -

நடிகர் சிலம்பரசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். துவக்கத்தில் மன்மதன், வல்லவன், கோவில் போன்ற சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை கொடுத்து வந்த சிலம்பரசன், பிறகு பல்வேறு விமர்சனங்களில் சிக்கி தனது மார்க்கெட்டை இழந்தார். குறிப்பாக ஷூட்டிங் வராமல் இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை வெறுப்பேற்றினார்.

அதன்பிறகு, நவரச நாயகன் கார்த்திக் முன்னணி நடிகராக இருந்த 1990 காலகட்டத்தில் கெட்ட பெயர் வாங்கியதை போலவே, நடிகர் சிலம்பரசனும் கோலிவுட் வட்டாரத்தில், அவப்பெயரை சம்பாதித்தார். சிம்புவை படம் இயக்குவது, தயாரிப்பது பெரிய போராட்டம் என்று பலரும் அவரை ஒதுக்க ஆரம்பித்தனர்.

எனினும் விண்ணைத்தாண்டி வருவாயா, மாநாடு போன்ற படங்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்புகளை உருவாக்கி தந்த நிலையில் செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்தார். பத்துதல படம் பிளாப் ஆன நிலையில், இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடித்து வருகிறார்.

மலையாள சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவரது இயக்கத்தில் வெளியான 2018 படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் விருதுக்கு இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. டொவினோ தாமஸ் நாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க கமிட் ஆன இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், நீண்ட நாட்களாக லைகா தரப்பில் இருந்து அழைக்கப்படாமல், அதிருப்தியில் காத்திருந்தார். இதையறிந்த வேல்ஸ் நிறுவன படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், உடனடியாக அவரிடம் பேசி தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க கமிட் செய்துவிட்டார்.

இந்த படத்தின் கதையை கேட்டு உற்சாகமான தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நாயகனாக சிம்புவை கமிட் செய்துள்ளார். கதையை கேட்ட சிம்புவும் குஷியாகி, உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தில் நடிக்க சிம்புவுக்கு ரூ. 20 கோடி சம்பளம் தரப்படுகிறது. இதற்கிடையே இந்த படத்தில் சிம்புவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலும் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. தக்லைப் படத்தில் உலக நாயகன் கமல், அடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சிம்பு நடிப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

சற்று முன்