- Advertisement -
Homeபொழுதுபோக்குமனசங்கர வரபிரசாத் காரு படத்தில் இடம்பெற்ற அந்த பாடல் - இத்தனை மில்லியன் பார்வைகளை கடந்து...

மனசங்கர வரபிரசாத் காரு படத்தில் இடம்பெற்ற அந்த பாடல் – இத்தனை மில்லியன் பார்வைகளை கடந்து விட்டதா? வியந்துபோன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவுக்கு இன்னும் வைப் குறையவில்லை என்பதுதான் உண்மை. திருமணத்துக்கு பிறகு அவர் நடித்த சில படங்கள் படுதோல்வி அடைந்த நிலையிலும் அவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அவர் நடிக்கும் படங்களை இயக்க இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று டாக்ஸிக் படத்தில் இருந்து வெளியான நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று டிரண்டிங் ஆகி வருகிறது. கேஜிஎஃப் நாயகன் யஷ் நடித்த இந்த படம் வருகிற மார்ச் 19ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை மலையாள பெண் இயக்குனர் கீது மோகன்தாஸ் டைரக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

நடிகை நயன்தாராவுக்கு தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் இன்னும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இந்தியில் அவர் நடித்த ஜவான் படம் பெரிய வெற்றியை பெற்றது. அட்லி இயக்கத்தில் உருவான இந்த படம் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. ஆனால் தொடர்ந்து பாலிவுட்டில் நயன்தாராவுக்கு வரவேற்பும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தெலுங்கு பட இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான படம் மனசங்கர வரபிரசாத் காரு. இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நாயகனாகவும் நாயகியாக நடிகை நயன்தாராவும் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார்.

- Advertisement -

அவரது இசையில் உருவான மீசாலா பில்லா என்ற பாடல் கடந்த அக்டோபர் மாதம் யூடியூப்பில் வெளியானது. இந்த பாடலில் இளம் நடிகர்களைப் போல சிரஞ்சீவி இப்படி ஒரு நடனமாடி காதல் பாடலில் நடிப்பது குறித்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து
இந்தப் பாடல் வெளியான 75 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

வழக்கமாக சிரஞ்சீவி நடித்த படம் என்றாலே அதில் அவரது அற்புதமான நடன அசைவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். நடனத்தில் அவர் எப்போதுமே வேற லெவலில்தான் தனது திறமையை வெளிப்படுத்துவார். அந்த வகையில் இந்த மீசாலா பில்லா பாடலில் இளம் நடிகர்களைப் போல சிரஞ்சீவி நடனமாடி இருக்கிறார். அதனால் இந்த பாடல் யூடியூப்பில் பலத்த கவனம் பெற்று 100 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. வரும் சங்கராந்தி பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

- Advertisement -

சற்று முன்