- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது என்னடா விஜய்க்கு வந்த சோதனை.. அதர் ஸ்டேட் சூப்பர் ஸ்டாரும் அவர் பட ப்ரோமோஷனை...

இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை.. அதர் ஸ்டேட் சூப்பர் ஸ்டாரும் அவர் பட ப்ரோமோஷனை கலாய்க்க ஆரமிச்சிட்டாரு.

- Advertisement -

விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வாரிசு. தில்ராஜு தயாரிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் படம் வெளியாகியிருந்தது. தெலுங்கில் இந்தப் படத்தின் மூலம் நிச்சயம் மார்க்கெட்டை விரிவுப்படுத்திவிடலாம் என்ற பெரும் நம்பிக்கையோடு இருந்தார் விஜய். அதுமட்டுமின்றி வாரிசுடன் துணிவு படம் களமிறங்கியதால் கண்டிப்பாக பொங்கல் வின்னராக மாறிவிட வேண்டும் என்ற முனைப்பும் அவரிடம் இருந்தது.

ஆனால் படத்தின் ரிசல்ட்டோ அவரது எண்ணத்தை தவிடுபொடியாக்கியது. படம் சீரியல் போல் இருக்கிறது என்றும்; விஜய்யை இதற்கு மேல் யாரும் இவ்வளவு கேவலமாக நடிக்க வைக்க முடியாது என்றும் ரசிகர்கள் கூறினர். முக்கியமாக விஜய்யின் நடித்த சில காட்சிகள் கடுமையான் ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்டன. அதேபோல் படத்தின் ரிலீஸுக்கு முன்னர் வம்சி கொடுத்த பேட்டிகளையும் படத்தின் ரிலீஸுக்கு பிறகு எடுத்துப்போட்டு அடிக்க ஆரம்பித்தனர் நெட்டிசன்கள்.

- Advertisement -

வம்சி பைடிபள்ளி பேச்சைப் போல இன்னொருவரின் பேச்சும் ட்ரோலானது. அது வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுவின் பேச்சு. முக்கியமாக வாரிசு ரிலீஸுக்கு முன்பே விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே பஞ்சாயத்தை பற்ற வைத்தார் தில்ராஜு. அதாவது துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. அதுதொடர்பாக பேட்டி அளித்திருந்த தில், தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1. எனவே வாரிசு படத்துக்குத்தான் அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என்றார். அவரது இந்தப் பேச்சு கடுமையான எதிர்ப்புகளை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிடமும் சந்தித்தது.

அதனையடுத்து வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, விஜய் சார் எக்ஸ்ப்ரெஷன்ஸ் வேணுமா அதுவும் இருக்கு” என்றார். விஜய்தான் நம்பர் 1 என்ற அவரது பேச்சு எதிர்ப்பை சந்தித்த சூழலில் இந்தப் பேச்சு ட்ரோலை சந்தித்தது. முக்கியமாக அந்த பேச்சுக்கு பலர் ட்யூனும் போட ஆரம்பித்தனர்.

- Advertisement -

நெட்டிசன்கள் மட்டுமின்றி படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளியே ஒரு மேடையில் தில்ராஜு பேசப்போவதற்கு முன்னர் ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு ட்யூனை பாடியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது கஸ்டடி பட ப்ரோமோஷனின்போது ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சியில் இதேபோல் பேசினார்.

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் இதேபோல் பேசியிருக்கிறார். அவர் நடித்திருக்கும் போலா ஷங்கர் (வேதாளம் ரீமேக்) ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷனில் கலந்துகொண்ட அவர் நக்கலாக சிரித்துக்கொண்டே, “ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, எண்ட்டெர்டெயின்மெண்ட் வேணுமா எண்ட்டெர்டெயின்மெண்ட் இருக்கு, க்ளாமர் வேணுமா க்ளாமர் இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு” என பேசினார்.அதனைப் பார்த்த ரசிகர்கள் என்னடா இது விஜய்க்கு வந்த சோதனை; இங்கு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என சொல்லப்படும் நிலையில் அடுத்த மாநிலத்து சூப்பர் ஸ்டார் பங்கமாக கலாய்க்கிறாரே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்