- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் செய்த துரோகத்துக்கு ஆதாரம் இருக்கிறது, அவர் அதை மறுத்தால் ஆதாரத்தை வெளியிடத் தயார் -...

சிவகார்த்திகேயன் செய்த துரோகத்துக்கு ஆதாரம் இருக்கிறது, அவர் அதை மறுத்தால் ஆதாரத்தை வெளியிடத் தயார் – பத்திரிகையாளர் பிஸ்மி உறுதி

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்த முக்கியமான இளம் நடிகர். விஜய் டிவியில் ஒரு காம்பியராக தன் வாழ்க்கையை துவங்கிய அவர், சினிமாவில் நடிகராகி, ஒரு நல்ல இடத்தை அடைந்தார். குறிப்பாக பெண்கள், டீன் ஏஜ் வயதினர் மனங்களில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் டி இமான் தந்த நேர்காணல் ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய ஒரு துரோகத்தை செய்துவிட்டார். என்னால் மறக்க முடியாத, வெளியில் சொல்ல முடியாத, ஏற்றுக்கொள்ளவே முடியாத அந்த துரோகத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன், என கூறியிருந்தார்.

- Advertisement -

அதுகுறித்து, பத்திரிகையாளர் பிஸ்மி இன்று மாலை ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஆறு மாதங்களுக்கு முன்பே, சிவகார்த்திகேயன், இமானுக்கு செய்த துரோகம் பற்றிய தகவல்கள் எனக்கு முழுமையாக, தெளிவாக தெரியும். ஆனால், தனிநபர்களை குறை சொல்வது, குற்றச்சாட்டு வைப்பது சரியல்ல, என்பதால் அதுபற்றி பேசுவதை தவிர்த்தேன்.

சில தினங்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட இமான் இதுபற்றி வெளிப்படையாக கூறி விட்டதால், அதற்கு பிறகும் இதுபற்றி பேசாமல், அவருக்கு நேர்ந்த அநீதி குறித்து மக்களிடம் கொண்டு சேர்க்காமல் இருப்பது சரியல்ல. ஒரு பத்திரிகையாளனாக, இமான் பக்கம் ஆதரவாக நிற்கும் நிலையில்தான், இதுபற்றி நான் பேசி வருகிறேன். ஒரு பத்திரிகையாளன், எப்போதும் அநீதியான விஷயங்களை மக்களுக்கு சொல்வதில் தவறி விடக்கூடாது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் குறித்துச் சொல்லப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என்றால், அவரிடம் டிவிட்டர் உள்ளது, பேஸ்புக் உள்ளது, ஒரே நிமிடத்தில் இது பொய்யான குற்றச்சாட்டு என பதிலிட்டு அதை மறுத்திருக்கலாம். இதுவரை அதை அவர் செய்யவில்லை. அல்லது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, இது தவறான குற்றச்சாட்டு என கூறியிருக்கலாம். அதையும் அவர் செய்ய மறுக்கிறார்.

அப்படி அவர் பொதுவெளியில் மறுக்கிறார் என்றால், அவர் இமானுக்கு செய்த துரோகத்துக்கான ஆதாரத்தை என்னால் பொதுவெளியில் காட்ட முடியும். அவர் துரோகம் செய்தது உண்மைதான் என்பதை நிரூபிக்க முடியும். துரோகம் செய்துவிட்டு தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ள அவரால் முடியாது. அயலான் படம் தீபாவளிக்கு மட்டுமல்ல, பொங்கலுக்கு வந்தாலும் ஓடாது. அவரது இமேஜ் மக்கள் மத்தியில், இந்த விவகாரத்தால் மிக மோசமாக சரிந்து விட்டது என்று கூறி இருக்கிறார் பத்திரிகையாளர் பிஸ்மி.

- Advertisement -

சற்று முன்