- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்ணீர் கடலில் மிதக்கும் வயநாடு... கேரளா துயரத்தில் பங்கெடுத்த விக்ரம்... நிவாரணத் தொகை வழங்கிய நடிகருக்கு...

கண்ணீர் கடலில் மிதக்கும் வயநாடு… கேரளா துயரத்தில் பங்கெடுத்த விக்ரம்… நிவாரணத் தொகை வழங்கிய நடிகருக்கு பாராட்டு…

- Advertisement -

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோரம் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் முக்கியமான மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

- Advertisement -

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த மழை, மிகப்பெரிய துயரத்தை கொடுத்திருக்கிறது. அங்குள்ள சூர மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய மூன்று இடங்களில் இரவு நேரத்தின்போது மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது.

 

- Advertisement -

கற்பனைக்கும் எட்டாத வகையில், கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டருக்கு நிலம் சரிந்ததாக மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியானது. இது எதுவும் தெரியாமல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பலரும் இன்று உயிருடன் இல்லை. கிட்டத்தட்ட இரண்டு மூன்று கிராமங்களையே மண் சரிவு மூடி இருக்கிறது. கண்மூடி தூங்கியவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் அவரது உறவினர்கள் விழி பிதுங்கி அலைகின்றனர்.

 

சாலியர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தாண்டியும் உடல்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. தற்போது வரை 230க்கும் மேற்பட்ட உடல்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர். அங்கு தொடர்ந்து உடல்நிலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் தோன்ற சடலங்கள் வருவது, காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

 

இந்த சம்பவத்தில் சில தமிழர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். பலரை இன்னும் காணவில்லை என்பதால் தேடும் பணி முடித்து விடப்பட்டுள்ளது. துயரத்தில் சிக்கி இருக்கும் கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும் கை கொடுத்து உதவி வருகின்றன. தமிழ்நாடு சார்பில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிலைமையை கேட்டறிந்தார். அது போக அரசு 5 கோடி ரூபாய் உதவியும் அளித்துள்ளது.

 

இந்த நிலையில் திரையுலகை சேர்ந்தவர்களும் கேரள அரசுக்கு உதவி வருகின்றனர். அதன்படி நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாயை வழங்கி இருக்கிறார். அவர் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இந்த தொகையை அனுப்பி இருக்கிறார். இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு விக்ரம் உதவிக்கரம் நீட்டி இருப்பதை பலரும் பாராட்டுகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்