- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவரை நடிக்க கூப்பிட்டது தப்பா போச்சே, உடனடியாக ஹீரோவை மாற்றிய டைரக்டர் - அயோத்தி படத்துக்கு...

இவரை நடிக்க கூப்பிட்டது தப்பா போச்சே, உடனடியாக ஹீரோவை மாற்றிய டைரக்டர் – அயோத்தி படத்துக்கு பின்னால இப்படி ஒரு கதை நடந்திருக்கா?

- Advertisement -

ஒரு திரைப்படத்தை பொருத்த வரை அந்த படத்தின் கேப்டன் டைரக்டர் மட்டும்தான். படத்தின் மாபெரும் வெற்றிக்கும், மிக மோசமான தோல்விக்கும் அவர் மட்டுமே பொறுப்பேற்க முடியும். ஏனெனில் ஒரு படைப்பை உருவாக்கி, அதை மக்களின் பார்வைக்கு வைப்பவர் இயக்குநர்தான்.

ஒரு கதைக்கருவை மையப்படுத்திய திரைப்படம் உருவாக்கத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர் என பலரும் உதவினாலும் படத்தை தாங்கி நிற்பது இயக்குநரின் தனி ஆளுமைதான். அவர்தான் அந்த படத்தை உருவாக்குவதில், கேரக்டர்களை தேர்வு செய்வதில் தனது திறமையை காட்டி சிறந்த படமாக ரசிகர்களுக்கு தருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டு வந்த சிறந்த படங்களில் முக்கிய இடத்தை பிடிப்பது அயோத்தி. இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கிய படம். மிகச் சிறந்த கதைக்கரு, திரைக்கதையில் படத்தை கொண்டு போன விதம், காட்சியமைப்புகள், நடிகர்கள் தேர்வு என இந்த படம் பலவிதங்களில் ரசிகர்களை திருப்திபடுத்தியதால் வெற்றி பெற்றது.

இப்படி திரைக்கதையால், யதார்த்த உண்மைகளால் ரசிகர்களை திருப்திபடுத்தும் படங்கள் அத்தி பூத்தது போல எப்போதாவது தான் தமிழ் சினிமாவில் வெளிவருகிறது. மற்றபடி ஹீரோயிசம் காட்டி பில்டப் செய்யும் படங்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமே கிடையாது. தடுக்கி விழுந்தால் ரஜினி, அஜீத், விஜய் படங்கள் உடனே திரைக்கு வந்துவிடும். இந்த பில்டப் நாயகர்களை நம்பி தான் தமிழ் சினிமா வாழ்கிறது, வளர்கிறது என பேசுவது காலத்தின் கொடுமையாக இருக்கிறது.

- Advertisement -

அயோத்தி போன்ற படங்களை ரசிக்க தெரிந்த மக்கள், இந்த பில்டப் ஹீரோக்களின் படங்களையும் வெற்றி பெறச் செய்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இந்த சூழலில் அயோத்தி படத்தின் ஹீரோவாக நடிக்க வேண்டியவர் சசிக்குமார் அல்ல. வேறு ஒருவர்தாஜ் ஹீரோதான் நடிக்க இருந்தார் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. மிக நல்ல படத்தில் நடிக்கும் ஒரு வாய்ப்பை அவரே கெடுத்துக்கொண்டதும் தெரிய வந்துள்ளது.

அயோத்தி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனவர் உறியடி விஜயகுமார். இவர் ஹீரோவாக நடித்து, அவரே டைரக்ட் செய்த படம்தான் உறியடி. அயோத்தி படத்தில் ஹீரோவாக நடிக்க வந்த விஜயகுமார், டைரக்டரிடம் கதையில் பல மாற்றங்களை சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பில் அடிக்கடி தலையிட்டு தொல்லை செய்திருக்கிறார். அவர் கதையில் குறுக்கீடு செய்ததால் ஒரு கட்டத்தில் அயோத்தி கதையை விட்டுவிட்டு வேறு ஒரு கதையில் படம் செல்வதை தெரிந்துக்கொண்ட டைரக்டர் மந்திரமூர்த்தி, அவரை கழட்டி விட்டுவிட்டு ஹீரோவாக சசிக்குமாரை ஹீரோவாக வைத்து படத்தை நினைத்தபடி எடுத்து முடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்