- Advertisement -
Homeபொழுதுபோக்குடாடா, குட் நைட் பட வரிசையில் இந்த ஆண்டின் அடுத்த ஃபீல் குட் படமாகிறதா ரியோ...

டாடா, குட் நைட் பட வரிசையில் இந்த ஆண்டின் அடுத்த ஃபீல் குட் படமாகிறதா ரியோ ராஜின் ஜோ… எப்படி இருக்கிறது திரைப்படம்?…

- Advertisement -

கோலிவுட்டில் சில காலங்களாகவே ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த படங்களே அதிகளவுக்கு வெளியாகின்றன. இந்த ஃபார்மட்டை லோகேஷ் கனகராஜ்தான் தொடங்கி வைத்தார் என்று அடித்துக் கூறலாம். போதைப் பொருள், துப்பாக்கி சத்தம் என அவர் படங்களில் ஆக்சன் காட்சிகள் தூக்கலாக இருக்க, கிளைமாக்ஸில் ஏதாவது ஒரு நவீன ரகத் துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும்.

இப்படியான நேரத்தில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. எந்தவித பெரிதான அதிரடி காட்சிகளும் இல்லாமல், பெரும் காதலை மையப்படுத்தி மிக அழகாக எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த வரிசையில் இந்த ஆண்டு அடுத்ததாக மக்கள் மனதை வென்ற தேவைப்படும் டாடா. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த கவின் இதில் நாயகனாக நடிக்க, ரசிகர்களின் நெஞ்சங்களை வருடியது டாடா திரைப்படம். தந்தைக்கு மகளுக்குமான பாசத்தை சரியான விகிதத்தில் தூவிய இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

இதன்பிறகு மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்த அயோத்தி திரைப்படமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த ஆண்டின் மற்றொரு ஃபீல் குட் மூவி யாக அது அமைந்தது. இதைத் தொடர்ந்து, மணிகண்டன் நடிப்பில் குட் நைட் திரைப்படம் வெளியானது. இதனை விநாயகம் சந்திரசேகரன் இயக்கியிருந்தார்.

- Advertisement -

குறட்டையால் கதாநாயகன் படும் அவஸ்தையையும், கதாநாயகன் கதாநாயகி இடையே இருக்கும் காதலையும், குடும்ப உறவுகளையும் கச்சிதமாக விளக்கி கைதட்ட வைத்தது குட் நைட் திரைப்படம். இந்த வரிசையில் தற்போது ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜோ திரைப்படத்தையும் கூறலாம். ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்த ரியோ ராஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைய, கதாநாயகனாக இரண்டாவது படத்தில் நடித்திருக்கிறார்.

கல்லூரி காதலையும் அதன் நினைவுகளையும் எடுத்துச் சொல்கிறது ஜோ திரைப்படம். இதன் முதல் பாதி ஆவெரேஜ் ஆக இருப்பதாகவும், இரண்டாம் பாதி நன்றாக உள்ளது என்றும் பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர். இரண்டு கதாநாயகிகளை கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், காதல் வாசம் ரசிகர்களை கவர்ந்திழுப்பதாக கூறியுள்ளனர். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் நிச்சயம் இந்த திரைப்படம் வசூல் ஆளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்