கடந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியான படம் மஞ்சும்மெல் பாய்ஸ். இந்த படம் மலையாளமாக இருந்தாலும் கொடைக்கானலில் சம்பவங்கள் நடப்பது போன்ற கதைக்களத்தில் உருவானதால் படத்தில் தமிழ் நடிகர்களும் நடித்திருந்தனர். கமல் நடித்த குணா படப்பாடல் கண்மணி அன்போடு பாடலும் படத்தில் வந்தது. அதனால் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் இந்த படம் கொண்டாடப்பட்டது.
இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் மலையாள சௌபின் சாஹிர். இந்த படத்தை தயாரித்ததும் அவர்தான். இப்போது கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன் கூலி படத்தில் இருந்து மோனிகா என்ற ஐட்டம் பாடல் காட்சி வெளியானது.
இந்த மோனிகா பாடல் காட்சியில் நடிகை பூஜா ஹெக்டேவுடன் நடிகர் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடவில்லை. மாறாக நடிகர் சௌபிர் சாஹிர் தான் பயங்கரமான மூவ்மெண்டுகளில் ஸ்டெப்ஸ் போட்டு சுறுசுறுப்பாக ஆடியிருந்தார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் அசந்து போய்விட்டனர். பாடலும் பெரிய அளவில் டிரண்டிங் ஆனதால் சௌபிர் சாஹிருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
ஆனால் முதலில் கூலி படத்தில் சௌபிர் சாஹிர் நடித்துள்ள இந்த கேரக்டரில் நடிக்க இருந்தது நடிகர் பகத் பாசில்தான். அவர் நடிக்க மறுத்த நிலையில்தான் சௌபிர் சாஹிர் அந்த கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் பகத் பாசிலும் சௌபின் சாஹிரும் மலையாளத்தில் பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். படங்களை இணைத்து தயாரித்திருக்கின்றனர். நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை பகத் பாசில் கூலி படத்தில் நடிக்க மறுத்த நிலையில், அவர்தான் சௌபின் சாஹிரிடம் பேசி நல்ல கேரக்டர், நடிங்க என்று கூலி படத்தில் நடிக்கச் சொன்னாரா, லோகேஷ் கனகராஜிடம் எனக்கு பதிலா இவர் நடிக்கலாம் என சௌபின் சாஹிரை சிபாரிசு செய்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு சௌபின் சாஹிரும் பகத் பாசிலும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.
ஆனால் கூலி படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல், சௌபின் சாஹிரை வேற லெவலில் கொண்டு சென்றுவிட்டது. பகத் பாசிலுக்கு கிடைத்திருக்க வேண்டிய புகழ் சௌபின் சாஹிருக்கு போய்விட்டது. அதே நேரத்தில் ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்த பகத் பாசிலுக்கு பெரிய வரவேற்பு இல்லை. கூலி படத்தில் நடிக்க அழைத்த போது, மாரீசன் படத்தில் வடிவேலுவுடன் வெயிட்டான கேரக்டரில் நடிக்க பகத் பாசிலுக்கு வாய்ப்பு வந்தது. கூலியை விட மாரீசன் தான் பெஸ்ட் என அந்த பக்கம் போய்விட்டார் பகத் பாசில். அதனால் மாரீசன் படம் வெளியானால்தான் பகத் பாசில் எடுத்தது சிறந்த முடிவா என்பது தெரிய வரும்.





