- Advertisement -
Homeபொழுதுபோக்குநமக்கு எதிர்ப்பு ரொம்ப ரொம்ப அதிகமாயிட்டே இருக்கு, உஷாரா இருங்க - தவெக எம்எல்ஏக்களுக்கு பட்டுப்புடவை...

நமக்கு எதிர்ப்பு ரொம்ப ரொம்ப அதிகமாயிட்டே இருக்கு, உஷாரா இருங்க – தவெக எம்எல்ஏக்களுக்கு பட்டுப்புடவை வேட்டி சட்டை தந்து தீபாவளி வாழ்த்து சொன்ன சிஎம் விஜய்!

- Advertisement -

தமிழ்நாட்டில் 6 மாதங்களாக தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, தவெக எம்எல்ஏக்கள் அராஜகப்போக்கு அதிகரித்துள்ளதாக திமுக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் தவெக எம்எல்ஏக்களை நேற்று நட்சத்திர ஓட்டலில் சந்தித்த முதல்வர் விஜய், நமக்கு எதிர்ப்பு ரொம்ப ரொம்ப அதிகமாகிட்டே வருது, எதுக்கும் உஷாராக இருங்க என்று கூறி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து பட்டுப்புடவை பட்டு வேட்டி சட்டை கொடுத்து எம்எல்ஏக்களை வழியனுப்பி வைத்திருக்கிறார். மற்றபடி எந்தவிதமான விமர்சனங்கள் புகார்கள் குறித்து யாரையும் கண்டிக்கவும் இல்லை, அதுபற்றி எதுவும் கேட்கவும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து விஜய் எதுவுமே பேசவில்லை. அந்த கூட்டத்துக்கு செய்தியாளர்களே அனுமதிக்கப்படாத நிலையில் தவெக தரப்பில் ஐடி விங்க் மூலமாக தரப்படும் தகவல்களே விஜய் பேசியதாக வெளியாகி உள்ளதாகவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சற்று முன்